முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.016.திருவிடைமருது
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.016.திருவிடைமருது
6.016.திருவிடைமருது
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
2244 | சூலப் படையுடையார் தாமே போலுஞ் மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும் வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும் ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும் |
6.016.1 |
இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.
2245 | காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் பாரார் பரவப் படுவார் போலும் சீரால் வணங்கப் படுவார் போலும் ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும் |
6.016.2 |
இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.
2246 | வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் பூதங்க ளாய புராணர் போலும் பாதம் பரவப் படுவார் போலும் ஏதங்க ளான கடிவார் போலும் |
6.016.3 |
இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார்.
2247 | திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி பண்குணத்தார் பாடலோ டாட லோவாப் எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும் |
6.016.4 |
பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப்படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசைநோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேகவடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும் (சுருதிகூட்டும்) இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர்.
2248 | ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப் மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு ஏகம்பம் மேயாரு மெல்லா மாவார் |
6.016.5 |
இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர்.எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.
2249 | ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் செய்வினைகள் நல்வினைக ளானார் போலும் கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங் எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும் |
6.016.6 |
இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும்,பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.
2250 | பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் விரியாத குணமொருகால் நான்கே யென்பர் தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும் எரியாய தாமரைமே லியங்கி னாரும் |
6.016.7 |
இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.
2251 | தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் ஆலம் அமுதாக வுண்டார் போலும் காலனையுங் காய்ந்த கழலார் போலுங் ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும் |
6.016.8 |
இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.
2252 | 2152.பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் அந்திவாய் வண்ணத் தழகர் போலும் வந்த வரவுஞ் செலவு மாகி எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும் |
6.016.9 |
இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூமாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்றசெந்நிற அழகர். அழகிய நீலகண்டர் உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.
2253 | கொன்றையங் கூவிள மாலை தன்னைக் நின்ற அனங்கனை நீறா நோக்கி அன்றவ் வரக்கன் அலறி வீழ என்று மிடுபிச்சை யேற்றுண் பாரும் |
6.016.10 |
இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்தமன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறி விழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருது - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இடைமருது, ஈசனார், போலும்இடைமருது, போலும், மானார், பார்வதி, பண்புகளாகவும், பத்துத், அமைந்துள்ளார், நறுமணம், கூந்தலை, இயல்பினர், படுவார், கமழ்குழலாள், நிற்பவராய், வேள்வி, திசைகளிலும், உயிர்களை, உடையவர், முடையார், சொல்லப்படும், கொன்றை, உள்ளத்தில், நீங்காத, பயந்தார், பாகராய், விகிர்தர், உடையவராய், வைத்தார், திருச்சிற்றம்பலம், திருமுறை, வீசும், முடிமாலையாக, திருவிடைமருது, வேறுபட்ட, திருமாலை, விரும்பித், போலும்திசையனைத்து