முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.097.சித்தத்தொகை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.097.சித்தத்தொகை

5.097.சித்தத்தொகை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2026 | சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர் அந்தி வான்நிறத் தானணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னானடி வந்திப் பாரவர் வானுல காள்வரே. |
5.097.1 |
சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும், சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும், அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர்.
2027 | அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர் உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர் கண்டிங் காரறி வாரறி வாரெலாம் வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே. |
5.097.2 |
அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும்; அச்சுடரைக் கண்டு இங்கு ஆர் அறியவல்லவர்கள்? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர்.
2028 | ஆதி யாயவ னாரு மிலாதவன் போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன் பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச் சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே. |
5.097.3 |
தன்னுடலிற்பாற் பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் அனைத்தும் ஆதி ஆகியவன் தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்டமுடியை உடைய புண்ணியன்.
2029 | இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர் பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர் கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர் அட்ட மூர்த்தி யருளென் றடைவரே. |
5.097.4 |
தன்னுடலிற்பாற் பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் அனைத்தும் ஆதி ஆகியவன் தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்டமுடியை உடைய புண்ணியன்.
2030 | ஈறில் கூறைய னாகி எரிந்தவெண் ணீறு பூசி நிலாமதி சூடிலும் வீறி லாதன செய்யினும் விண்ணவர் ஊற லாயரு ளாயென் றுரைப்பரே. |
5.097.5 |
முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும், தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும், தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர்.
2031 | உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப் பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம் பிச்சை யேபுகு மாகிலும் வானவர் அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே. |
5.097.6 |
உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும், தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும், தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர்.
2032 | ஊரிலாயென்றொன் றாக உரைப்பதோர் பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா காரு லாங்கண்ட னேயுன் கழலடி சேர்வி லார்கட்டுகுத் தீயவை தீயவை. |
5.097.7 |
தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ஓன்றாக உரைக்கும் பேரில்லாதவனே பிறைசூடிய பிஞ்ஞகனே கருமை பொருந்திய திருக்கழுத்தினனே உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவை என்றும் சேரும்.
2033 | எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச் சிந்திப் பாரவர் தீவினை தீருமால் வெந்த நீறுமெய் பூசிய வேதியன் அந்த மாவளப் பாரடைந் தார்களே. |
5.097.8 |
எந்தையே எம்பெருமானே என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தம்மை உடையார்.
2034 | ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில் ஆனை யீருரி போர்த்தன லாடிலும் தான வண்ணத்த னாகிலுந் தன்னையே வான நாடர் வணங்குவர் வைகலே. |
5.097.9 |
பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போத்துத் தீயுடன்ஆடினாலும், தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர்.
2035 | ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான் பைகொள் பாம்பரை யார்த்த பரமனே. |
5.097.10 |
படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் தலைவன் அந்தணன் ( அழகும் குளிர்ச்சியும் உடையவன்) ஆண்பெண் வடிவமுடைய திருமேனியினன் மேன்மை மிகுந்த வெண் திருநீரு பூசிய கருமை கொண்ட திருக்கழுத்தினன் மான்குட்டி உடைய கையினன்.
2036 | ஒருவ னாகிநின் றானிவ வுலகெலாம் ஒருவ ராகிநின் றார்கட் கறிகிலான் அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல் பரவு வாரவர் பாவம் பறையுமே. |
5.097.11 |
இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும், திருமாலும் பிரனுமாகிய இருவராகி நின்றவர் அறியஇயலாதவனும், அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந் கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும்.
2037 | ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும் நாத னேயரு ளாயென்று நாடொறும் காதல் செய்து கருதப் படுமவர் பாத மேத்தப் பறையும் நம் பாவமே. |
5.097.12 |
கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும், " தலைவனே அருள்வாய்" என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும்.
2038 | ஒளவ தன்மை யவரவ ராக்கையான் வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ மொளவர் நீண்மலர் மேலுறை வானொடு பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே. |
5.097.13 |
அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக. மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள்.
2039 | அக்க மாமையும் பூண்டன லேந்தியில் புக்குப் பல்பலி தேரும் புராணனை நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ தொக்க வானவ ராற்றொழு வானையே. |
5.097.14 |
அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள் தோறம் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும், தொகத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக.
2040 | கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந் திங்கள் சூடிய தீநிற வண்ணனார் இங்க ணாரெழில் வானம் வணங்கவே அங்க ணாற்கது வாலவன் தன்மையே. |
5.097.15 |
அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் அதுவே அவர் தன்மை.
2041 | ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில் மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகரில் சேவடி யேபுக லாகுமே. |
5.097.16 |
நல்ல நெஞ்சே வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக் கொண்டு உய்யப்போதலுற்றால், மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும்.
2042 | சரண மாம்படி யார்பிற ரியாவரோ கரணந் தீர்த்துயிர் கையி லிகர்ந்தபின் மரண மெய்திய பின்னவை நீக்குவான் அரண மூஎணில் எணிதவ னல்லனே. |
5.097.17 |
புகலடையத்தக்கவர் பிறர் யாவர்? செயலற்று உயிர் இறக்கம்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன்? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ?
2043 | ஞமனென் பான்நர கர்க்க நமக்கெலாம் சிவனென் பான்செழு மான்மறிக் கையினான் கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான் தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே. |
5.097.18 |
நரகர்க்கெல்லாம் ஞமனாகியும், நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும், மான்குட்டி உடைய கையினனும், விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனம் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும்.
2044 | இடப மேறியு மில்பலி யேற்பவர் அடவி காதலித் தாடுவ ரைந்தலைப் படவம் பாம்பரை யார்த் பரமனைக் கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே. |
5.097.19 |
இடபத்தின்மீது ஏறியும், இல்லங்கள் தோறம் பலி ஏற்பவரும், சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும், ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக.
2045 | இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும் புணர்ந்த வாளர வம்மதி யோடுடன் அணைந்த அஞ்சடை யானவன் பாதமே உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே. |
5.097.20 |
கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் துறினைச் சொரிந்திடும் இயல்பினதும், பொருந்திய வாள்போன்றபாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர்.
2046 | தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும் கருமந் தான்கரு மான்மறிக் கையினான் அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. |
5.097.21 |
தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினையாளர்களே தானே தருமமாகவும், தானே தவமாகவும், தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது, அரிய மருந்து போன்ற (அமிர்தம்) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகைச் சேர்வீராக.
2047 | நமச்சி வாயவென் பாருள ரேலவர் தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்ட தோர் வாழ்க்கைய னாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே. |
5.097.22 |
நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர்தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும்.
2048 | பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை வெற்பில் தோன்றிய வெங்கதில் கண்டவப் புற்ப னிக்கெடு மாறது போலுமே. |
5.097.23 |
பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக. உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக் கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும்.
2049 | மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான் கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால் பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம் பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே. |
5.097.24 |
கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும், மான்குட்டியை உடைய கையினரும், கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் அவ்வாறு புரியது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர்.
2050 | இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர் நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் மயக்க மெய்தவன் மாலெரி யாயினான் வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே. |
5.097.25 |
வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன், இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும், பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான்.
2051 | அரவ மார்த்தன லாடிய அண்ணலைப் பரவு வாரவர் பாவம் பறைதற்குக் குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல் கரவில் நான்முக னுங்கரி யல்லரே. |
5.097.26 |
பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும், குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ?
2052 | அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின் றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான் தழலுந் தாமரை யானொடு தாவினான் கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே. |
5.097.27 |
இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும், வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல்ஊட்டியவனும் எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திரமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டறக்ரியவனுமாவான்.
2053 | இளமை கைவிட் டகறலு மூப்பினார் வளமை போய்ப்பிணி யோடு வருதலால் உளமெ லாமொளி யாய்மதி யாயினான் கிளமை யேகிளை யாக நினைப்பனே. |
5.097.28 |
இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாகயான் நினைப்பேன்.
2054 | தன்னிற் றன்னை யறியுந் தலைமகன் தன்னிற் றன்னை யறியில் தலைப்படும் தன்னிற் றன்னை யறிவில னாயிடில் தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. |
5.097.29 |
தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான்.தன்னில் தன்னை அறியும் அறிவிலாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன்.
2055 | இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன் றலங்க லோடுட னேசெல வூன்றிய நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும் வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே. |
5.097.30 |
இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்தத்தொகை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமான், திருமாலும், கெடும், மான்மறிக், இறைவன், கையினான், தன்னில், தன்னிற், தேவர்கள், நாடொறும், பிரமனும், பாம்பினை, பெருமானின், புண்ணியன், திருவடிகளை, கழலணிந்த, தீவினை, இடுப்பில், நாள்தோறும், வார்களே, பிரமனோடு, வாரவர், உடையவன், மான்குட்டி, நின்றவனும், கையினன், உடையவனாகிய, இல்லங்கள், யானொடு, இயக்கர், நின்று, தோன்றிய, நிற்பது, தானவர், யாயினான், அறியும், வருதலால், கரியனே, இமைத்து, அமைத்துக், வெல்லும், வெல்கொடி, தங்கிய, மூன்று, சொரிந்திடும், சார்தலால், நீங்கத், உணர்ந்த, விரும்பி, வணங்குவர், சோதியாகிய, சோதியுட்சோதியாய், பெண்ணுருவமாகி, தன்னுடலிற்பாற், அனைத்தும், ஆகியவன், இல்லாதவன், பற்றாவார், தனக்குப், வேதியன், வெள்ளிய, சிந்திப், திருச்சிற்றம்பலம், திருமுறை, பாரவர், காள்வரே, ஒள்ளிய, ஆள்வர், சிவந்த, மலர்கள், சேர்த்துப், கையில், பிச்சை, அருள்வாயாக, சூடினும், தீர்த்து, பொருந்திய, அந்தணன், சித்தத்தொகை, தன்னையே, திருநீறு, ளாயென், வாழ்க்கைய, நீண்டமுடியை, புனைந்த, னாகிலும், வானவர், செய்யினும், சூடிலும், றடைவரே, பாம்பரை