முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.096.மனத்தொகை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.096.மனத்தொகை
5.096.மனத்தொகை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2016 | பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் மின்னுள்ளத்திரள் வெண்பிறை யாயிறை நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே. |
5.096.1 |
எந்தை பெருமானே! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க.
2017 | முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ டக்க ணம்மரை யாயரு ளேயலா தெக்க ணும்மில னெந்தை பிரானிரே. |
5.096.2 |
எந்தை பெருமானே! முக்கண்ணும் உடையாய்! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய்!புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன்.
2018 | பணியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை முனியாய் நீயுல கம்முழு தாளினும் தனியாய் நீசரண் நீசல மேபெரி தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே. |
5.096.3 |
எந்தை பெருமானே! தண்ணியாய்! விரும்புதறைகுரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய்! சரண் நீயே; எனைபால் வஞ்சனையே பெரிது; எனக்கு இனியாய் நீயே.
2019 | மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் குறையு மாயினை கோளர வோடொரு பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே. |
5.096.4 |
எந்தை பெருமானே! வேதங்களையும் பாடுவீர்; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர்; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை.
2020 | பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் ஆர்ம்மா யாடர வோடன லாடிய கூத்தா நின்குரை யார்கழ லேயல தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே. |
5.096.5 |
எந்தை பெருமானே! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய்; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய்; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது.
2021 | பைம்மா லும்மர வாபர மாபசு மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும் அம்மா லல்லது மற்றடி நாயினேற் கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே. |
5.096.6 |
எந்தை பெருமானே! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே! பரமனே! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன். 'நாயினேன்' என்றும் பாடம்.
2022 | வெப்பத் தின்மன மாசு விளக்கிய செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே. |
5.096.7 |
எந்தை பெருமானே! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் "சிவன்" என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன்.
2023 | திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் நிகழு மொண்பொரு ளாயின நீதியென் புகழு மாறு மலானுன பொன்னடி இகழு மாறில னெந்தை பிரானிரே. |
5.096.8 |
எந்தை பெருமானே! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன்.
2024 | கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை எப்பற் றியறி தற்கரி யாயருள் அப்பற் றல்லது மற்றடி நாயினேன் எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே. |
5.096.9 |
திருமாலால் அறிதற்கரியவனே! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை.
2025 | எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம் எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார் எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே. |
5.096.10 |
எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனத்தொகை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பிரானிரே, பெருமானே, னெந்தை, இல்லேன், யெம்பிரா, உடையாய், என்றும், மற்றடி, அல்லது, நாயினேன், ஒள்ளிய, ஒலிக்கும், எப்பற், ஒப்பத், னென்றடி, கெந்தை, புன்சடை, திருச்சிற்றம்பலம், திருமுறை, வெண்பிறை, தெந்தை, எனக்கு, மனத்தொகை, தனியாய், சூடினை