முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.007.திருஏகம்பம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.007.திருஏகம்பம்
4.007.திருஏகம்பம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
62 | கரவாடும் வன்னெஞ்சர்க் விரவாடும் பெருமானை அரவாடச் சடைதாழ இரவாடும் பெருமானை |
4.007.1 |
பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய், காளையை இவரும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
63 | தேனோக்குங் கிளிமழலை தானோக்குந் திருமேனி வானோக்கும் வளர்மதிசேர் ஏனோர்க்கும் பெருமானை |
4.007.2 |
தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய், செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சிவந்தவானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன்.
64 | கைப்போது மலர்தூவிக் முப்போது முடிசாய்த்துத் அப்போது மலர்தூவி எப்போது மினியானை |
4.007.3 |
கைகளால், அலரும் பருவத்து மொட்டுக்களையும் பூக்களையும் அர்ப்பணித்துவிருப்போடு தேவர்கள் காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதற் கடவுளாய் எனக்கு எப்பொழுதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உள்ளத்தால் அடக்கி, அபிடேக நீரையும் மலர்களையும் அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
65 | அண்டமா யாதியா பிண்டமா யுலகுக்கோர் தொண்டர்தா மலர்தூவிச் இண்டைசேர் சடையானை |
4.007.4 |
உலகங்களாய், உலகங்களுக்குக் காரணனாய் அரிய வேதங்களாய், ஐம்பெரும் பூதங்களின் பிண்டமாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும், தலைக் கோலத்தை உடையவனாய், அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்துச் சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து அணிவிக்கின்ற, தலைமாலை அணிந்து சடையை உடைய பெருமானுமாயவனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
66 | ஆறேறு சடையானை பாறேறு படுதலையிற் நீறேறு திருமேனி ஏறேறும் பெருமானை |
4.007.5 |
கங்கை தங்கிய சடையினனாய், ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாய், பருந்துகள் படிகின்ற இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய், திருநீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளையை இவரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
67 | தேசனைத் தேசங்கள் பூசனைப் பூசனைக வாசனை மலைநிலம்நீர் ஈசனை யெம்மானை |
4.007.6 |
ஒளிவடிவினனாய்,உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய், அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய், பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய், மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய், எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
68 | நல்லானை நல்லான வல்லானை வல்லார்கண் சொல்லானைச் சொல்லார்ந்த இல்லானை யெம்மானை |
4.007.7 |
பெரியவனாய், மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய், தன்னை உள்ளவாறு உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய், வேத வடிவினனாய், வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய், இயல்பாகவே களங்கம் ஏதும் இல்லாதவனாய், எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
69 | விரித்தானை நால்வர்க்கு புரித்தானைப் பதஞ்சந்திப் தரித்தானைக் கங்கைநீர் எரித்தானை யெம்மானை |
4.007.8 |
சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில்விரித்து உரைத்தவனாய், வேதங்களால் பரம்பொருளாக விரும்பப்பட்டவனாய், சொற்களும், சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய், தாழ்ந்த சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய், மும்மதில்களையும் எரித்தவனாய் உள்ள எம்பெருமானை என் மனத்தே வைத்தேனே.
70 | ஆகம்பத் தரவணையா பாகம்பெண் ணாண்பாக மாகம்ப மறையோது யேகம்ப மேயானை |
4.007.9 |
பத்து அவதாரங்கள் எடுத்த, பாம்புப் படுக்கை உடைய திருமாலால் அறிய இயலாதவனாய், ஒருபாகம் பெண்பாகமாகவும் மறுபாகம் ஆண்பாகமாகவும், நிலைபெற்ற ஆன்மாக்கள் தலைவனாய், பெரிய தூண்போல அசைக்கமுடியாத, (என்றும் நிலைபெற்ற)வேதங்களை ஓதும் தலைவனாய், மதில்களை உடைய காஞ்சி நகரில் ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என்மனத்து வைத்தேனே.
71 | அடுத்தானை யுரித்தானை கொடுத்தானைக் குலவரையே தொடுத்தானைப் புரமெரியச் எடுத்தானைத் தடுத்தானை |
4.007.10 |
தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும், அருச்சுனனுக்குப் பாசுபதப் படை நல்கியவனும், மேருமலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினைமும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய், சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என் மனத்தே வைத்தேனே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஏகம்பம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வைத்தேனே, பெருமானை, நிலையாக, வைத்துக், மனத்தில், கொண்டேன், தலைவனாய், யெம்மானையென்மனத்தே, பெருமானையென்மனத்தே, நிலைபெற்ற, திருமாலால், காளையை, எங்கள், வடிவினனாய், மனத்தே, மேம்பட்ட, இவரும், திருச்சிற்றம்பலம், திருமுறை, உள்ளத்தில், அடக்கி, திருஏகம்பம்