முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.052.திருவாரூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.052.திருவாரூர்
4.052.திருவாரூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
498 | படுகுழிப் பவ்வத் தன்ன கெடுவதிம் மனிதர் வாழ்க்கை முடுகுவ ரிருந்து ளைவர் அடியனேன் வாழ மாட்டே |
4.052.1 |
பெரிய பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது. ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன். இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன. ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன்.
499 | புழுப்பெய்த பண்டி தன்னைப் ஒழுக்கறா வொன்ப துவா சழக்குடை இதனு ளைவர் அழிப்பனாய் வாழ மாட்டே |
4.052.2 |
ஆரூர் மூலட்டனீரே! புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.
500 | பஞ்சின்மெல் லடியி னார்கள் நெஞ்சினோய் பலவுஞ் செய்து நஞ்சணி மிடற்றி னானே அஞ்சினேற் கஞ்ச லென்னீ |
4.052.3 |
விடத்தை அணிந்த கண்டரே! தலைவரே! அடியவரால் விரும்பப்படுகின்றவரே! பஞ்சினைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு அஞ்சுகின்ற எனக்கு, ஆரூர்ப் பெருமானாகிய நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர்.
501 | கெண்டையந் தடங்க ணல்லார் குண்டராய்த் திரிதந் தைவர் கண்டுநான் றரிக்க கில்லேன் அண்டவா னவர் போற்று |
4.052.4 |
நீலகண்டரே! எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே! கெண்டைமீன்போன்ற அழகிய பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என் ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பம் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின் செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக் கொள்வீராக.
502 | தாழ்குழ லின்சொ னல்லார் ஏழையே னாகி நாளு வாழ்வதே லரிது போலும் ஆழ்குழிப் படுக்க வாற்றே |
4.052.5 |
என் தந்தையாகிய பெருமானே! ஆரூர் மூலத்தானத்தில் உறைபவரே! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன்? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன். இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும்.
503 | மாற்றமொன் றருள கில்லீர் சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் கூற்றம்போ லைவர் வந்து ஆற்றவுங் கில்லே னாயே |
4.052.6 |
ஆரூர் மூலத்தானத்துப் பெருமானே! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத் தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர். தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப் போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும் துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன். யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர் அருளுகின்றீரில்லை.
504 | உயிர்நிலை யுடம்பே காலா துயரமே யேற்ற மாகத் பயிர்தனைச் சுழிய விட்டுப் அயர்வினா லைவர்க் காற்றே |
4.052.7 |
ஆரூர்ப் பெருமானே! உயிர் நிற்றற்குரிய இவ்வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்றமரமாக அமைத்து, உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு துன்பமாகிய, ஏற்றத்தோடு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப்பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்;
505 | கற்றதே லொன்று மில்லை பெற்றதேற் பெரிதுந் துன்பம் முற்றினா லைவர் வந்து அற்றுநா னலந்து போனே |
4.052.8 |
ஆரூர்ப் பெருமானே! அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை. மகளிர் பின்னே அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன். என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம் ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன்.
506 | பத்தனாய் வாழ மாட்டேன் சித்தத்து ளைவர் தீய மத்துறு தயிரே போல அத்தனே யமரர் கோவே |
4.052.9 |
தலைவரே! தேவருக்கு அரசரே! ஆரூர் மூலத்தானத்தாரே! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக, என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள் தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது.
507 | தடக்கைநா லைந்துங் கொண்டு எடுத்தவன் பேர்க்க வோடி முடித்தலை பத்துந் தோளு அடர்த்தருள் செய்த தென்னே |
4.052.10 |
ஆரூர் மூலட்டானத்தாரே! நீண்டஇருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப்பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட, அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே!
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமானே, அடியேன், ஆரூர்ப், உள்ளேன், ஐம்பொறிகள், பலவுஞ், இயலாதேனாய், ஐம்பொறிகளும், என்னைத், உள்ளம், அவற்றை, பொறுக்க, அணிந்த, தலைவரே, ஆற்றல், திருச்சிற்றம்பலம், திருமுறை, மாட்டேனாரூர்மூ, அறிவற்ற, விருப்பப்படி, திருவாரூர்