முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.051.திருக்கோடிகா
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.051.திருக்கோடிகா
4.051.திருக்கோடிகா
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
488 | நெற்றிமேற் கண்ணி னானே கற்றைப்புன் சடையி னானே செற்றவர் புரங்கண் மூன்றுஞ் குற்றமில் குணத்தி னானே |
4.051.1 |
கோடிகா உடைய பெருமான் நெற்றிக்கண்ணனாய், நீற்றைத் திருமேனியிற் பூசியவனாய், முறுகிக் கற்றையான சிவந்த சடையினனாய், கடலில் தோன்றிய நஞ்சினைப்பருகியவனாய், பகைவருடைய முப்புரங்களிலும் தீயைச் செலுத்தியவனாய், குற்றமற்ற நற்பண்பினாய் உள்ளவனாவான்.
489 | கடிகமழ் கொன்றை யானே வடிவுடை மங்கை தன்னை அடியிணை பரவ நாளு கொடியணி விழவ தோவாக் |
4.051.2 |
கொடிகள் ஏற்றப்பட்டுத் திருவிழாக்கள் நடத்தப் பெறுதல் நீங்காத கோடிகாப் பெருமான் நறுமணம் கமழும் கொன்றைப் பூவினனாய், கையில் ஏந்திய மண்டையோட்டை உடையவனாய், அழகிய பார்வதியைப் பாகமாக மார்பில் கொண்டவனாய்த் தன் திருவடிகளை வழிபடுமாறு நாள்தோறும் அடியவர்களுக்கு அருள் செய்பவனாவான்.
490 | நீறுமெய் பூசி னானே ஏறுகந் தேறி னானே ஆறுமோர் நான்கு வேத கூறுமோர் பெண்ணி னானே |
4.051.3 |
கோடிகாப் பெருமான் நீற்றைத் திருமேனியில் பூசியவனாய், ஒளிவீசும் மழுப்படையினனாய், காளையை விரும்பி ஏறிஊர்ந்தவனாய், பெரிய கடலில் தோன்றிய அமுதத்தை ஒப்பவனாய், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய், பார்வதி பாகனாய் உள்ளான்.
491 | காலனைக் காலாற் செற்றன் நீலமார் கண்டத் தானே ஞாலமாம் பெருமை யானே கோலமார் சடையினானே |
4.051.4 |
கோடிகா உடைய பெருமான் காலனைக் காலால் ஒறுத்து மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த கருணையாளனாய், நீல கண்டனாய், நீண்டமுடிகளை உடைய தேவர்களுக்குத் தலைவனாய் உலகம் முழுதும் பரவிய பெருமானாய், குளிர்ந்த பிறைசூடும் அழகிய சடையினை உடையவனாய் உள்ளான்.
492 | பூணர வாரத் தானே காணில்வெண் கோவ ணம்முங் ஊணுமோர் பிச்சை யானே கோணல்வெண் பிறையி னானே |
4.051.5 |
கோடிகா உடைய தலைவன் பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து, கையில் மண்டையோட்டை ஏந்தி. பிச்சை ஏற்ற உணவையே உண்பவனாய்ப் பார்வதிபாகனாய் வளைந்த வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான்.
493 | கேழல்வெண் கொம்பு பூண்ட ஏழையே னேழை யேனா மாழையொண் கண்ணி னார்கள் கூழையே றுடைய செல்வா |
4.051.6 |
கோடிகா உடைய பெருமானே! பன்றியின் வெண்ணிறக் கொம்பினை அணிந்த ஒளிவீசும் மார்பினனாய், குட்டையான காளையை உடைய செல்வனே! எம் தந்தையாகிய தலைவனே!அழகிய ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரின் பார்வையாகிய வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன். அறிவிலியாகிய அடியேன் யாது செய்குவென்?
494 | அழலுமி ழங்கை யானே தழலுமி ழரவ மார்த்துத் நிழலுமிழ் சோலை சூழ குழலுமிழ் கீதம் பாடுங் |
4.051.7 |
நெருப்பை ஏந்திய உள்ளங்கையை உடையவனே! பார்வதிபாகனே! நெருப்பைக் கக்குகின்ற பாம்பினைக் கட்டிக் கொண்டு மண்டையோட்டில் பிச்சை பெறுபவனே! நிழலை வெளிப்படுத்துகின்ற சோலைகள் சூழ்ந்திருக்க அவற்றில் நீண்டகோடுகளை உடைய வண்டினங்கள் வேய்ங்குழல் ஒலிபோன்ற பாடல்களைப் பாடும் கோடிகாவை உடைய பெருமானே!
495 | ஏவடு சிலையி னானே மாவடு வகிர்கொள் கண்ணாண் ஆவடு துறையு ளானே கோவடு குற்றந் தீராய் |
4.051.8 |
அம்பை இணைத்த வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே! மாவடுவின் பிளப்பைப் போன்ற கண்களை உடைய பார்வதிபாகனே! ஆவடுதுறையில் உறைபவனே! கோடிகா உடைய தலைவனே! ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன். பசுக்கொலைக்கு ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக.
496 | ஏற்றநீர்க் கங்கை யானே நாற்றமா மலர்மே லேறு ஆற்றலா லளக்க லுற்றார்க் கூற்றுக்குங் கூற்ற தானாய் |
4.051.9 |
கோடிகாவில் உள்ள பெருமானே! கங்கையைச் சடையில் ஏற்றவனே! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும் நறுமணம கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகியஇருவரும் கூடித் தம் ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே! யமனுக்கும் யமனாயினாய் நீ.
497 | பழகநா னடிமை செய்வேன் மழகளி யானையின் றோன் அழகனே யரக்கன் றிண்டோ குழகனே கோல மார்பா |
4.051.10 |
கோடிகா உடையகோவே! ஆன்மாக்களின் தலைவனே! பாவங்களைப்போக்குபவனே! இளைய மதமயக்கமுடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோடிகா - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோடிகா, பெருமான், உள்ளான், தலைவனே, பெருமானே, னானேகோடிகா, பிச்சை, காளையை, பார்வதி, காலனைக், அகப்பட்டு, யானையின், கொண்டு, பார்வதிபாகனே, ஒளிவீசும், கண்களை, மண்டையோட்டை, பூசியவனாய், கடலில், நீற்றைத், திருச்சிற்றம்பலம், திருமுறை, தோன்றிய, கோடிகாப், திருக்கோடிகா, உடையவனாய், ஏந்திய, கையில், கமழும், நான்கு