முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.050.திருக்குறுக்கை
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.050.திருக்குறுக்கை
4.050.திருக்குறுக்கை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர்.
தேவியார் - ஞானாம்பிகையம்மை.
486 | நெடியமால் பிரம னோடு அடியொடு முடியுங் காணா துடியுடை வேட ராகித் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் |
4.050.1 |
உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில், சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற, பிரமனும், நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர். அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து. அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார்.
487 | ஆத்தமா மயனு மாலு சோத்தமெம் பெருமா னென்று தீர்த்தமா மட்ட மீமுன் கூத்தராய் வீதி போந்தார் |
4.050.2 |
குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் 'எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம்' என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர்.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. | 4.050.3-10 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறுக்கை - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்குறுக்கை, திருமாலும், பிரமனும், திருச்சிற்றம்பலம், திருமுறை, திரங்கள்