முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.042.திருத்துருத்தி
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.042.திருத்துருத்தி
4.042.திருத்துருத்தி
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதேசுவரர்.
தேவியார் - முகிழாம்பிகையம்மை.
414 | பொருத்திய குரம்பை தன்னைப் இருத்தியெப் பொழுதும் நெஞ்சு ஒருத்தியைப் பாகம் வைத்தங் துருத்தியஞ் சுடரி னானைத் |
4.042.1 |
எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா. எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள். பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே!
415 | சவைதனைச் செய்து வாழ்வான் இவையொரு பொருளு மல்ல அவைபுர மூன்று மெய்து சுவையினைத் துருத்தி யானைத் |
4.042.2 |
குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள். மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே!
416 | உன்னியெப் போதும் நெஞ்சு கன்னியை யொருபால் வைத்துக் பொன்னியி னடுவு தன்னுட் துன்னிய துருத்தி யானைத் |
4.042.3 |
பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள்.
417 | ஊன்றலை வலிய னாகி தான்றலைப் பட்டு நின்ற வான்றலைத் தேவர் கூடி தோன்றலைத் துருத்தி யானைத் |
4.042.4 |
உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி, உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று, அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட'எங்கள் தலைவனே' என்ற தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே!
418 | உடறனைத் கழிக்க லுற்ற இடர்தனைக் கழிய வேண்டி கடறனி னஞ்ச முண்டு சுடர்தனைத் துருத்தி யானைத் |
4.042.5 |
கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே! உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள்.
419 | அள்ளலைக் கடக்க வேண்டி பொள்ளலிக் காயந் தன்னுட் வள்ளலை வான வர்க்குங் துள்ளலைத் துருத்தி யானைத் |
4.042.6 |
பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே, இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய், தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும், காளையை ஏறி ஊரும் பெருமானை, அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள்.
420 | பாதியி லுமையா டன்னைப் வேதிய னென்று சொல்லி சாதியாஞ் சதுர்மு கனுஞ் சோதியைத் துருத்தி யானைத் |
4.042.7 |
பார்வதிபாகன், வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க, பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே!
421 | சாமனை வாழ்க்கை யான தூமநல் லகிலுங் காட்டித் சோமனைச் சடையுள் வைத்துத் தூமனத் துருத்தி யானைத் |
4.042.8 |
பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுதுஅவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள்.
422 | குண்டரே சமணர் புத்தர் கண்டதே கருது வார்கள் விண்டவர் புரங்க ளெய்து தொண்டர்க டுணையி னானைத் |
4.042.9 |
பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத்துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.
423 | பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் அண்டத்தைக் கழிய நீண்ட கண்டொத்துக் கால்வி ரலா துண்டத்துத் துருத்தி யானைத் |
4.042.10 |
உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும், மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்துருத்தி - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடியேன், யானைத்தொண்டனேன், பெருமானை, துருத்தி, உய்ந்த, இருந்தவாறென்னே, யேத்து, ஆதலின், தரிசித்து, திருத்துருத்திப், இருக்கும், இருந்தவாறு, சடையுள், துயர்களைப், ளுயிர்கட், போற்றுங்கள், விரும்பினால், அடியோடு, காண்பதற்கு, நீங்கள், கழிக்க, துருத்திப், செய்து, எப்பொழுதும், திருச்சிற்றம்பலம், திருமுறை, துதியுங்கள், பார்வதிபாகனாய்க், திருத்துருத்தி, அழித்து, மும்மதில்களையும், பெருமானைத்