முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.041.திருச்சோற்றுத்துறை
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.041.திருச்சோற்றுத்துறை
4.041.திருச்சோற்றுத்துறை
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
404 | பொய்விரா மேனி தன்னைப் மெய்விரா மனத்த னல்லேன் ஐவரா லலைக்கப் பட்ட செய்வரா லுகளுஞ் செம்மைத் |
4.041.1 |
வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே! வேதங்களை ஓதும் நாவினரே! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன்.
405 | கட்டராய் நின்று நீங்கள் எட்டவாங் கைகள் வீசி அட்டகா மலர்கள் கொண்டே சிட்டரா யருள்கள் செய்வார் |
4.041.2 |
மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது. தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார். சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார்.
406 | கல்லினாற் புரமூன் றெய்த எல்லியும் பகலு முள்ளே பல்லில்வெண் டலைகை யேந்திப் சொல்லுநன் பொருளு மாவார் |
4.041.3 |
மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள். பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய், வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே.
407 | கறையராய்க் கண்ட நெற்றிக் இறையரா யினிய ராகித் பிறையராய்ச் செய்த வெல்லாம் துறையராய்ப் புகுந்தென் னுள்ளச் |
4.041.4 |
நீலகண்டராய், நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய், இனியராய், ஒப்பற்றவராய் இருப்பாராய், குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய், பெருஞ்செயல்களையே செய்வராய் உள்ள, என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு, அது நீங்க அருள் செய்தவராவார்.
408 | பொந்தையைப் பொருளா வெண்ணிப் எந்தையே யேக மூர்த்தி பந்தமாய் வீடு மாகிப் சிந்தையுட் டேறல் போலுந் |
4.041.5 |
பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை, 'பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே! எம் தலைவரே! தனிப் பெருந் தெய்வமே' என்றுதுதியாதேனாய், விரைந்தகலக் காலங் கழித்தேன்.
409 | பேர்த்தினிப் பிறவா வண்ணம் பார்த்தனுக் கருள்கள் செய்த ஆர்த்துவந் திழிவ தொத்த தீர்த்தமாய்ப் போத விட்டார் |
4.041.6 |
பார்வதிபாகராய், அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை, இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள். (அடைவு கெட - வாயில் வந்தவந்த படி.)
410 | கொந்தார்பூங் குழலி னாரைக் எந்தையெம் பிரானாய் நின்ற முந்தரா வல்கு லாளை செந்தாது புடைகள் சூழ்ந்த |
4.041.7 |
விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான, எங்கள் தந்தையாராய், எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர். அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே!
411 | அங்கதி ரோன வனை வெங்கதி ரோன்வ ழியே அங்கதி ரோன வனை செங்கதி ரோன்வ ணங்குந் |
4.041.8 |
அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.
412 | ஓதியே கழிக்கின் றீர்க நீதியா னினைய மாட்டீர் சாதியா நான்மு கனுஞ் சோதியாய்ச் சுடர தானார் |
4.041.9 |
'அவன் அருளாலே அவனைக் காணவேண்டும்' என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும், திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய், அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள்.
413 | மற்றுநீர் மனம்வை யாதே பெற்றதோ ருபாயந் தன்னாற் கற்றுவந் தரக்க னோடிக் செற்றுகந் தருளிச் செய்தார் |
4.041.10 |
மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால், மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல், பல நூல்களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத்துறையனை, அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சோற்றுத்துறை - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நீங்கள், திருச்சோற்றுத்துறை, திருச்சோற்றுத், காலத்தைக், அருள்கள், துறையனார், சடையில், திருமுறை, தலைவராய், பலகாலும், விரைந்து, கிரணங்களை, அவரைத், எங்கள், நெற்றிக்கண்ணராய்ப், திருச்சோற்றுத்துறையனாரே, நின்று, பெருமானே, கொண்டு, காலத்தை, கழிக்க, திரியும், உள்ளத்தில், பெருமானை, திருச்சிற்றம்பலம், பொருளாகக்