முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.039.திருவையாறு
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.039.திருவையாறு
4.039.திருவையாறு
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
384 | குண்டனாய்ச் சமண ரோடே துண்டனே சுடர்கொள் சோதீ அண்டனே யமர ரேறே தொண்டனேன் றொழுதுன் பாதஞ் |
4.039.1 |
அறிவிலியாய் அடியேன் சமணரோடு கூடிப் பெற்ற மனமயக்கத்தை ஒழித்தவனே! ஞானப் பிரகாசனே! தூய வழியாக நின்ற உலகத்தலைவனே! தேவர்கள் தலைவனே! திருவையாற்றில் உகந்தருளியிருக்கும் தேன்போன்ற இனியவனே! அடியேன் உன் திருவடிகளைத் தொழுது அவற்றின் பெருமைகளைக் சொல்லிக் கொண்டு நாட்டில் உலவுகின்றேன்.
385 | பீலிகை யிடுக்கி நாளும் வாலிய தறிகள் போல வாலியார் வணங்கி யேத்துந் டாலியா வெழுந்த நெஞ்ச |
4.039.2 |
மயிற்பீலியைக் கையில்வைத்துக் கொண்டு அச் செயலையே பெரிய தவமாகக் கருதி, மேல்தோல் உரிக்கப்பட்டதனால் வெண்மையாக உள்ள தடிகள்போல ஆடையின்றி அறிவுகெட்ட சமணர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள்? தூய அறிவினை உடையவர்கள் வணங்கித்துதிக்கின்ற திருவையாற்றை உகந்தரளி இருக்கின்ற தேன் போன்ற பெருமானோடு கூடிக் களிக்கும் அடியேன் உடைய நெஞ்சம் உண்மையில் அழகிதாகவே எழுந்தியல்லாதாகிறது.
386 | தட்டிடு சமண ரோடே ஒட்டிடு மனத்தி னீரே மொட்டிடு கமலப் பொய்கைத் டொட்டிடு முள்ளத் தீரே |
4.039.3 |
உணவுக்குரிய உண்கலன்களாகிய தட்டுக்களைக் கையில் இடுக்கிக் கொள்ளும் சமணரோடு செருக்குற்று அச் செயலையே தவம் என்று கருதி யான் அவர்களோடு இணைந்து வாழுமாறு செய்த மனமே! உனக்கு நான் என்ன தண்டனை கொடுப்பேன்? மொட்டோடு கூடிய தாமரைகள் காணப்படும், மானிடர் ஆக்காத நீர்நிலைகளை உடைய திருவையாற்றில் விரும்பி உறையும் தேன்போன்ற எம்பெருமானோடு இப்பொழுது இணைந்து வாழும் நெஞ்சே! உன் செயல் கண்டு உன்னை நான் இப்பொழுது மெச்சுகின்றேன்.
387 | பாசிப்பன் மாசு மெய்யர் நேசத்தா லிருந்த நெஞ்சை தேசத்தார் பரவி யேத்துந் வாசத்தால் வணங்க வல்லார் |
4.039.4 |
பல்துலக்காததனால் பசிய நிறம்படிந்த பல்லினராய் அழுக்குப் படிந்த உடம்பினராய்ப் பயனற்ற வாழ்வினை வாழும் சமணரோடு அன்பினால் கூடிவாழ்ந்த மனத்தை அவரிடம் இருந்து பிரித்து நல்வழிப்படுத்தும் வழியை அறியமாட்டாதேனாய் முன்பு அடியேன் இருந்தேன். உலகிலுள்ள நன்மக்கள் எல்லோரும் அன்பினால் முன்நின்று துதித்து வணங்குகின்ற திருவையாறு அமர்ந்த தேனை நறுமணம் கமழும் பூக்களோடு சென்று வணங்கும் ஆற்றல் உடையவர்களுடைய கொடிய வினைகள் அழிந்து ஒழியும் என்பதை இப்பொழுது அறிந்தேன்.
388 | கடுப்பொடி யட்டி மெய்யிற் வடுக்களோ டிசைந்த நெஞ்சே மடுக்களில் வாளை பாயுந் அடுத்துநின் றுன்னு நெஞ்சே |
4.039.5 |
கடுக்காய்ப் பொடியை உடம்பில் தடவிக்கொள்ளும் அதனையே ஒரு தவ வாழ்க்கை என்று கருதும் குற்றங்களிலே பொருந்திய என் மனமாகிய அறிவுகெட்ட பொருளே! நீ அந்தப் பயனற்ற செயல்களால் பெற்ற பயன்தான் யாது? நீர்த்தேக்கங்களிலே வாளைமீன்கள் துள்ளித்திரியும் திருவையாறு அமர்ந்ததேனை அணுகி நிலையாக நின்று தியானிக்கும் மனமே! நீ சிறந்த தவச் செயலை இப்பொழுதே செய்தனை ஆகின்றாய்.
389 | துறவியென் றவம தோரேன் உறவினா லமண ரோடு நறவமார் பொழில்கள் சூழ்ந்த மறவிலா நெஞ்ச மேநன் |
4.039.6 |
வீண் செயல் என்று ஆராய்ந்து உணராதேனாய்ச் சமணர்களோடு கொண்ட உறவினாலே அவர்கள் குறிப்பிட்ட வழியிலேயே காலம் போக்கி உண்மையான செயல்பற்றிய அறிவு இன்றி நல்லுணர்வு இல்லேனாய் வாழ்ந்தேன். தேன் நிரம்பிய சோலைகள் சூழ்ந்த திருவையாறு அமர்ந்த தேனை மறவாமையால் வாழும் மனமே! உனக்கு இந்த நன்மதி வாய்த்தவாறென்னே!
390 | பல்லுரைச் சமண ரோடே சொல்லிய செலவு செய்தேன் மல்லிகை மலருஞ் சோலைத் எல்லியும் பகலு மெல்லா |
4.039.7 |
வினவிய ஐயங்களுக்குப் பல வழிகளைக் கொண்டு விடைகூறும் சமணர்களோடு பழகிப் பல ஆண்டுகள் அவர்கள் குறிப்பிட்ட வழியில் வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது அடியேன் வாழ்நாள் வீணானது குறித்து மனத்தளர்வு உறுகின்றேன். மல்லிகைச் செடிகளில் பூக்கள் மலரும் சோலைகளையுடைய திருவையாறு அமர்ந்ததேனை இப்பொழுது இரவு பகல் ஆகிய எல்லாக் காலத்தும் தியானிக்கும் இனிமை இருந்தவாறென்னே!
391 | மண்ணுளார் விண்ணு ளாரும் எண்ணிலாச் சமண ரோடே தெண்ணிலா வெறிக்குஞ் சென்னித் கண்ணினாற் காணப் பெற்றுக் |
4.039.8 |
அறிவில்லாத மனமே! மக்களும் தேவரும் தம் தீவினை நீங்கத் தௌந்த பிறை ஒளிவீசும் சென்னியை உடையராய்த் திருவையாறு அமர்ந்த தேன் போன்ற எம்பெருமானை மண்ணவரும் விண்ணவரும் வணங்குவாராக, நீ ஒரு பொருளாக எண்ணத் தகாதவரான சமணரோடு இணைந்து காலத்தைப் போக்கினாயே. அப்பெருமானை நாம் கண்ணினால் காணப் பெற்றதனால் நாம் விரும்பிய வீடுபேற்றின்பம் கைகூடிவிட்ட காரியமாயிற்று.
392 | குருந்தம தொசித்த மாலும் திருந்துநற் றிருவ டியுந் அருந்தவ முனிவ ரேத்துந் பொருந்திநின் றுன்னு நெஞ்சே |
4.039.9 |
இடைக்குலச் சிறுமியர் மரக்கிளைகளில் தொங்க விடப்பட்ட தம் ஆடைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு உடுத்துமாறு குருந்தமரத்தைக் கண்ணனாக அவதரித்த காலத்தில் வளைத்துக் கொடுத்த திருமாலும், மேம்பட்ட தாமரையில் விரும்பித் தங்கிய பிரமனும் மேம்பட்ட பெரிய திருவடிகளையும் திருமுடியையும் காண இயலாதவர்களாக, மேம்பட்ட முனிவர்கள் உயர்த்திப் புகழும் திருவையாறு அமர்ந்த தேனை உன்னுள் பொருத்தித் தியானிக்கும் மனமே! அச்செயலால் நம் பொய்யான உடலிலிருந்து நுகரும் வினைப்பயன்கள் யாவும் அழிந்து விடுதல் தௌவு.
393 | அறிவிலா வரக்க னோடி முறுகினான் முறுகக் கண்டு நிறுவினான் சிறு விரலா அறிவினா லருள்கள் செய்தான் |
4.039.10 |
இறைவனுடைய ஆற்றலைப் பற்றிய உண்மை அறிவு இல்லாத இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்ப்பதற்கு முழுமையாக முயன்ற செயலைக்கண்டு, உண்மையான ஞான வடிவினனாகிய திருவையாறு அமர்ந்த தேன்போன்றவன் தன் மனத்தால் நோக்கித் தன் கால்விரல் ஒன்றனை அழுத்த அதனால் இராவணன் உடல் நொறுங்கித் தரையில் வீழப் பின் அவன் இறைவனைப் பற்றிய அறிவோடு சாமவேதகீதம் பாட, அவனுக்கு அப்பெருமான் அருள்களைச் செய்தான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - றமர்ந்த, திருவையாறு, அடியேன், அமர்ந்த, சமணரோடு, இப்பொழுது, தியானிக்கும், இணைந்து, வாழும், மேம்பட்ட, கொண்டு, அழிந்து, றுன்னு, அமர்ந்ததேனை, சமணர்களோடு, அவர்கள், இராவணன், பற்றிய, உண்மையான, குறிப்பிட்ட, சென்று, அன்பினால், வெழுந்த, யேத்துந்திருவையா, தவமென், தேன்போன்ற, செயலையே, அறிவுகெட்ட, திருவையாற்றில், பயனற்ற, திருச்சிற்றம்பலம், உனக்கு, திருமுறை