முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.038.திருவையாறு
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.038.திருவையாறு
4.038.திருவையாறு
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
374 | கங்கையைச் சடையுள் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் அங்கையு ளனலும் வைத்தார் |
4.038.1 |
நம் தலைவனாராகிய ஐயாறனார், சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய், மான்குட்டியையும், மழுப்படையையும், உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார்.
375 | பொடிதனைப் பூச வைத்தார் கடியதோர் நாகம் வைத்தார் வடிவுடை மங்கை தன்னை அடியிணை தொழவும் வைத்தார் |
4.038.2 |
ஒளி விளங்கும் பூணூலை அணிந்து, கொடிய நாகத்தைப் பூண்டு, கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து, அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார்.
376 | உடைதரு கீளும் வைத்தார் படைதரு மழுவும் வைத்தார் விடைதரு கொடியும் வைத்தார் அடைதர வருளும் வைத்தார் |
4.038.3 |
கீளொடு கோவணம் அணிந்து, உலகங்களை நிலை நிறுத்தி, மழுப்படை ஏந்தி, பாய்கின்ற புலியின் தோலை உடுத்து, காளை எழுதிய கொடியை உயர்த்தி, வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார்.
377 | தொண்டர்க டொழவும் வைத்தார் இண்டையைத் திகழ வைத்தார் வண்டுசேர் குழலி னாளை அண்டவா னவர்க ளேத்து |
4.038.4 |
எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார், சடையில் தூய பிறையைச் சூடி, முடி மாலையை விளங்க வைத்து, வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய், அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார்.
378 | வானவர் வணங்க வைத்தார் கானிடை நடமும் வைத்தார் ஆனிடை யைந்தும் வைத்தார் ஆனையி னுரிவை வைத்தார் |
4.038.5 |
தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய், அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய், சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய், மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து, பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து, யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார்.
379 | சங்கணி குழையும் வைத்தார் வெங்கதி ரெரிய வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் அங்கம தோத வைத்தார் |
4.038.6 |
தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய், அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய், சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய், எல்லா உலகங்களும் படைத்தவராய், இரவையும், பகலையும் தோற்றுவித்தவராய், கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய், வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணரவைத்தவராய் உள்ளார்.
380 | பத்தர்கட் கருளும் வைத்தார் சித்தத்தை யொன்ற வைத்தார் முத்தியை முற்ற வைத்தார் அத்தியி னுரிவை வைத்தார் |
4.038.7 |
தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய், காளையை ஏறியூர்பவராய், அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய், அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய், அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய், அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய், யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார்.
381 | ஏறுகந் தேற வைத்தார் நாறுபூங் கொன்றை வைத்தார் கூறுமை பாகம் வைத்தார் ஆறுமோர் சடையில் வைத்தார் |
4.038.8 |
தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக்காளை வாகனத்தை உடையவராய், இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய், நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய், இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய், பார்வதிபாகராய், கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார்.
382 | பூதங்கள் பலவும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார் ஆதியு மந்தம் வைத்தார் |
4.038.9 |
தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய், ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய், இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய், இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய், தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய், தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவராய் உள்ளார்.
383 | இரப்பவர்க் கீய வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாங் பரப்புநீர் கங்கை தன்னைப் அரக்கனுக் கருளும் வைத்தார் |
4.038.10 |
தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வைத்தார்ஐயனை, ஐயாறனார், தலைவராகிய, வைத்தவராய், சடையில், கருளும், உள்ளார், அணிந்து, தொழவும், செய்தவராய், யானைத்தோலைப், னுரிவை, செய்து, அடியவர், சூடியவராய், வழங்கியவராய், உடையவராய், கொண்டவராய், வழிகளை, செய்பவராய், அணிந்தவராய், புலியின், ஒளிவீசும், தொழுமாறு, மழுவும், கங்கையைச், திருமுறை, திருச்சிற்றம்பலம், பார்வதி, பாகராய், திருவையாறு, அடியார்கள், தோலும், அடியவர்கள், வைத்தார்பொங்குவெண், வைத்து, வானவர்