முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.035.திருவிடைமருது
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.035.திருவிடைமருது
4.035.திருவிடைமருது
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
344 | காடுடைச் சுடலை நீற்றர் பாடுடைப் பூதஞ் சூழப் தோடுடைக் கைதை யோடு ஏடுடைக் கமல வேலி |
4.035.1 |
சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து, கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி, பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான், மருதநிலத்தில், மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார்.
345 | முந்தையார் முந்தி யுள்ளார் சந்தியார் சந்தி யுள்ளார் சிந்தையார் சிந்தை யுள்ளார் எந்தையா ரெம்பி ரானா |
4.035.2 |
எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய், அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய், அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய், தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய், மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய், இடைமருதை இடங்கொண்டவராவா.
346 | காருடைக் கொன்றை மாலை நீருடைச் சடையுள் வைத்த போருடை விடையொன் றேற ஏருடைக் கமல மோங்கு |
4.035.3 |
காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய், அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார்.
347 | விண்ணினார் விண்ணின் மிக்கார் பண்ணினார் பண்ணின் மிக்க கண்ணினார் கண்ணின் மிக்க எண்ணினா ரெண்ணின் மிக்க |
4.035.4 |
அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட, இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய், அதனினும் மேம்பட்டவராய், நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய், பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய், அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய், மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார்.
348 | வேதங்கள் நான்குங் கொண்டு பூதங்கள் பாடி யாட பாதங்கள் பரவி நின்ற ஏதங்க டீர நின்றா |
4.035.5 |
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர், தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார்.
349 | பொறியர வரையி லார்த்துப் முறிதரு வன்னி கொன்றை மறிதரு கங்கை தங்க எறிதரு புனல்கொள் வேலி |
4.035.6 |
புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி, கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார்.
350 | படரொளி சடையி னுள்ளாற் சுடரொளி மதியம் வைத்துத் அடரொளி விடையொன் றேற இடரவை கெடவு நின்றா |
4.035.7 |
இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளிவீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை, பாம்பு, ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய், பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய், அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார்.
351 | கமழ்தரு சடையி னுள்ளாற் தவழ்தரு மதியம் வைத்துத் மழுவது வலங்கை யேந்தி எழில்தரு பொழில்கள் சூழ்ந்த |
4.035.8 |
பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை, பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார்.
352 | பொன்றிகழ் கொன்றை மாலை மின்றிகழ் சடையில் வைத்து அன்றவ ரளக்க லாகா இன்றுட னுலக மேத்த |
4.035.9 |
பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை கங்கை, வன்னி இலை, ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி, ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார்.
353 | மலையுடன் விரவி நின்று தலையுட னடர்த்து மீண்டே சிலையுடை மலையை வாங்கித் இலையுடைக் கமல வேலி |
4.035.10 |
கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்கு அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து, மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிடைமருது - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திடங்கொண், பெருமான், மேம்பட்ட, கொன்றை, ஒளிவீசும், உள்ளார், இடைமருதை, சடையில், தலைவராய், உடையவராய், இடைமருது, வேலியிடைமரு, பூதங்கள், பாம்பு, தோன்று, மதியம், வினைகளையும், இவற்றைச், துதிக்குமாறு, காட்சி, சூடித், நின்றாரிடைமரு, திருமுறை, திருவிடைமருது, விடையொன், கொண்டுள்ளார், தம்மைச், வல்லவராய், திடங்கொண்டாரே, இடங்கொண்ட, திருச்சிற்றம்பலம், நான்கு