முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.031.திருக்கடவூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.031.திருக்கடவூர்
4.031.திருக்கடவூர்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்.
தேவியார் - அபிராமியம்மை.
304 | பொள்ளத்த காய மாயப் வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் உள்ளத்த திரியொன் றேற்றி கள்ளத்தைக் கழிப்பர் போலுங் |
4.031.1 |
துவாரங்கள் பல உடைய உடம்பெனும் மாயப் பண்டங்களாயப் போகந்தரும் சாதனங்களான மாதர் தொகுதியில் ஏற்படும்பற்றை அறவொழிக்க வேண்டில் சிவபெருமானுக்குத் தீபம் ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருத்தொண்டுகளை விரும்பி மேற்கொள்ளுங்கள். உள்ளமாகிய தகழியிலே உயிராகிய திரியை முறுக்கியிட்டு ஞானமாகியதீபமேற்றிக் கொண்டிருந்து உணருமாற்றால் உணரவல்லவர்களின் கொடுமைகள் அனைத்தையும் போக்குவர் திருக்கடவூர்ப் பெருமான்.
305 | மண்ணிடைக் குரம்பை தன்னை விண்ணிடைத் தரும ராசன் பண்ணிடைச் சுவைகள் பாடி கண்ணிடை மணியர் போலுங் |
4.031.2 |
இந்நிலவுலகிலே உமக்கக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின், யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்கவிரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார்? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப்பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார்.
306 | பொருத்திய குரம்பை தன்னுட் ஒருத்தனை யுணர மாட்டீ வருத்தின களிறு தன்னை கருத்தினி லிருப்பர் போலுங் |
4.031.3 |
உயிரைத் தன்னுள் பொருந்தச் செய்த மனித உடம்பில் இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர். உணர வேண்டிய ஒப்பற்ற கடவூர் வீரட்டராகிய அவரை உணர்ந்து, பெருமானாரை உணராதீராய் மனத்தில் ஏற்பட்டுள்ள தீங்கான எண்ணங்களை நீக்காதீராய் உள்ளீர். தம்மைத் துன்புறுத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளைச் செயற்படாதொழியச் செய்யும் வழியிலே முயன்று அவற்றை அடக்கிய ஞானியருடைய கருத்தில் எப்போதும் உள்ளார் கடவூர் வீரட்டனார்.
307 | பெரும்புலர் காலை மூழ்கிப் அரும்பொடு மலர்கள் கொண்டாங் விரும்பிநல்விளக்குத் தூபம் கரும்பினிற் கட்டிபோல் வார் |
4.031.4 |
வைகறையாமத்தில் நீராடிப் பெருமானிடத்தில் பத்தர்களாகி அரும்புகளையும் மலர்களையும் முறைப்படி பறித்துக் கொண்டு உள்ளத்தில் அன்பை ஆக்கி விருப்பத்தோடு நல்ல விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடவல்ல அடியவர்களுக்குக் கருப்பங்கட்டி போல இனிப்பவராவார் கடவூர் வீரட்டனார்.
308 | தலக்கமே செய்து வாழ்ந்து விலக்குவா ரிலாமை யாலே மலக்குவார் மனத்தி னுள்ளே கலக்கநான் கலங்கு கின்றேன் |
4.031.5 |
கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில்தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால்யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.
309 | பழியுடை யாக்கை தன்னிற் வழியிடை வாழ மாட்டேன் அழிவுடைத் தாய வாழ்க்கை கழியிடைத் தோணி போன்றேன் |
4.031.6 |
கடவூர் வீரட்டனீரே! குறைபாடுகள் யாவும் உள்ள இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ் நிலத்தில், பயன்படும் நீரை வீணாகப்பாய்ச்சி, நேரிய வழியில் வாழ மாட்டாதேனாய், இவ்வுலக வஞ்சனையை உள்ளவாறு தௌந்து உணரமாட்டேனாய், பாழாகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போல உள்ளேன்.
310 | மாயத்தை யறிய மாட்டேன் பேயொத்துக் கூகை யானேன் நேயத்தா னினைய மாட்டே காயத்தைக் கழிக்க மாட்டேன் |
4.031.7 |
தலைக்கோலம் அணிந்தவனே! பிறப்பில்லாதவனே! கடவூர் வீரட்டனே! பொய்ப்பொருளைப் பொய்ப்பொருள் என்று அறியமாட்டாதேனாய் மயக்கம் பொருந்திய மனத்தேனாகிப் பேயை ஒத்து அலைந்துதிரிந்து, கோட்டானைப் போலத் தௌவின்றிக் கலங்குகிறேன். அன்போடு உன்னைத் தியானிக்க ஆற்றல் இல்லாத, கீழாருள் கீழேனாகிய அடியேன், இவ்வுடம்பை இழப்பதற்கும் மனம் இல்லாதேனாய் உள்ளேன்.
311 | பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து உற்றலாற் கயவர் தேறா எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ |
4.031.8 |
கடவூர் வீரட்டனீரே! சிவனடிப் பற்றில்லா வாழ்க்கை வாழ்ந்து பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன். அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதித்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன். யான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! யான் யாது செய்ய வல்லேன்! ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே ஞானநூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை. ஆதலின் அடியேனுக்குப் பற்றுக் கோடாக இருப்பார் ஒருவரையும் காணேன்.
312 | சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் |
4.031.9 |
கடவூர் வீரட்டனார், சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் எம்பெருமானை பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலக மயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர்.
313 | முந்துரு விருவ ரோடு |
4.031.10 |
ஐந்தொழிற் கருத்தாக்கள் நிரலில் முற்படக் கூறப்படும் அயன், அரி எனும் இருவருடன் உருத்திரன், மகேசன், சதாசிவன் என்போரும் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு, இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும், கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப்பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடவூர், வீரட்டனார், போலுங்கடவூர்வீ, உள்ளேன், வாழ்ந்து, கொண்டு, வீரட்டனீரே, வாழ்க்கை, செய்து, முறைப்படி, திருமுறை, குரம்பை, கழிக்க, உடம்பாகிய, இவ்வுலக, திருச்சிற்றம்பலம், திருக்கடவூர், இருந்து