முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.003.திருவையாறு
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.003.திருவையாறு
4.003.திருவையாறு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே, கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.
21 | மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். |
4.003.1 |
விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.
22 | போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன் ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் |
4.003.2 |
சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை, பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி, 'அவர்கள் திருவடி வாழ்க' எனவும், 'அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம்' எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
23 | எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன் அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் |
4.003.3 |
நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும், இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க. இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
24 | பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் |
4.003.4 |
பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது, இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன்.அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
25 | ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக் காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன் ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் |
4.003.5 |
இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
26 | தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன் அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன் |
4.003.6 |
குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்லநிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
27 | கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்றபோது இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன் |
4.003.7 |
விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி, வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன், சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
28 | விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப் பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் |
4.003.8 |
விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும்இணைத்துப்பாடி, வைகறை யில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன்,சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது, பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
29 | முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப் பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன் அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் |
4.003.9 |
அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி, அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்த எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது, சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன்கண்டறியாதவற்றைக் கண்டேன்.
30 | திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமெழி யாளொடும் பாடி எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன் அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன் |
4.003.10 |
பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ, இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
31 | வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன் அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன் |
4.003.11 |
வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி, வீணாகக் கழிக்கப் படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன், எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும்பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை, ஏறு தழுவ, இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்டேன், அடியேன், வருவனவற்றைக், சிவமுமாகக், திருப்பாதம், னவர்திருப், சிவானந்தம், கண்டேன்கண்டே, கண்டறி, அவற்றை, றடைகின்ற, சக்தியும், கண்டதனால், கண்டறியாதவற்றைக், ஐயாற்றை, அடையும்போது, பார்வதியோடும், கண்ணியி, இணைந்து, இரண்டுமாக, லாளொடும், பேடையொ, இணைத்துப்பாடி, யாளொடும், சிறந்த, பெருமானை, பெடையோடு, இணைத்துப், பெருமானைப், காவிரியின், மதிக்கண்ணி, கொண்டு, எம்பெருமான், பார்வதியோடு, மெல்லியலாள், எம்பெருமானுக்கு, பறந்து, இரண்டுமாய், வடகரையில், கொய்துவரும், அமைந்த, பொன்னையும், உகப்புடையனவாகப், கரையில், கூந்தலை, மணியையும், பெறப்படும், அணிகலன்களையும், சேர்க்கும், மலர்களைக், ஆடிக்கொண்டு, பெருமானைத், திருவையாற்றை, னானைப், முடிமாலையாகச், பிறையை, திருமுறை, திருச்சிற்றம்பலம், படாமல், மெல்லிய, திருவடி, இரண்டும், இணையாக, கலந்து, பாடும், பெருமானைச், எனவும், திருவையாறு, யேந்திழை, லமர்ந்துறை