முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.108.திருக்கடவூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.108.திருக்கடவூர்
4.108.திருக்கடவூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்.
தேவியார் - அபிராமியம்மை.
1016 | மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உருட்டிய சேவடி யான்கட வூருறை |
4.108.1 |
தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.
1017 | பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன உதைத்தெழு சேவடி யான்கட வூருறை |
4.108.2 |
ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
1018 | கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் நெருப்புமிழ் கண்ணின் னீள்புனற் கங்கையும் பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் உரப்பிய சேவடி யான்கட வூருறை |
4.108.3 |
வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய், மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய், கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய், வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன்.
1019 | மறித்திகழ் கையினன் வானவர் கோனை குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் உறுக்கிய சேவடி யான்கட வூருறை |
4.108.4 |
மான்குட்டி விளங்கும் கையினனாய், தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட, மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன், கடவூர் உறை உத்தமன்.
1020 | குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் உழக்கிய சேவடி யான்கட வூருறை |
4.108.5 |
குழையணிந்த காதுகளை உடைய, தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன்.
1021 | பாலனுக் காயன்று பாற்கட லீந்து ஆலினிற் கீழிருந் தாரண மோதி சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை |
4.108.6 |
சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி, பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான், கடவூர் உறை உத்தமனாவான்.
1022 | படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் உடறிய சேவடி யான்கட வூருறை |
4.108.7 |
பரவிய சடையிலே கொன்றைமாலை, பாம்பு மாலை, பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய், உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய், ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன்.
1023 | வெண்டலை மாலையுங் கங்கை கரோடி பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து உண்டருள் செய்தபி ரான்கட வூருறை |
4.108.8 |
வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய், நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய், கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன்.
1024 | கேழல தாகிக் கிளறிய கேசவன் வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் றாழியு மீந்து வடுதிறற் காலனை ஊழியு மாய பிரான்கட வூருறை |
4.108.9 |
பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய், தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய், ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய், எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன்.
1025 | தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் ஊன்றிய சேவடி யான்கட வூருறை |
4.108.10 |
தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வமாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய், ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வூருறையுத்தமனே, கடவூர், யான்கட, உத்தமன், சிவந்த, மூவிலை, உடையவன், ஏந்திய, வேலுடைக், கூற்றுவனை, கொண்டு, கூற்றுவன், பொருந்திய, பெருமான், அணிந்த, விளங்கும், உயிரைக், ரான்கட, முத்தலைச், அவனைச், கதறுமாறு, வெகுண்ட, அரியவனாய், வளைந்த, திருவடிகளை, பிரமசாரியான, திருச்சிற்றம்பலம், திருமுறை, காலனைக், வெகுண்டு, செய்து, காலத்தில், திருக்கடவூர், சேவடியான், வானவர்