முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.005.திருப்பூந்தராய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.005.திருப்பூந்தராய்

3.005.திருப்பூந்தராய்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
2845 | தக்கன்
வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன்கழல் |
3.005.1 |
சிவனை மதியாது தக்கன் செயத் யாகத்தைத் தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப்படுகின்ற அச்சிவ பெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான்.
2846 | புள்ளி
னம்புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ |
3.005.2 |
பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும். ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான்.
2847 | வேந்த
ராய்உல காள விருப்புறின் பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல் |
3.005.3 |
நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள். மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைத்து, போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா. எனவே பிறவி நீங்கும். வீடுபேறு உண்டாகும்.
2848 | பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச் சிந்தை நோயவை தீர நல்கிடும் இந்து வார்சடை யெம்இ றையே |
3.005.4 |
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான். "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" (குறள் -7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது.
2849 | பொலிந்த
என்பணி மேனியன் பூந்தராய் மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட |
3.005.5 |
எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட, நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன், நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்குதலோடு, இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான். தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால், பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந்துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும், யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும்.
2850 | பூதம்
சூழப் பொலிந்தவன் பூந்தராய் நாதன் சேவடி நாளும் நவின்றிட |
3.005.6 |
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான்.
2851 | புற்றின்
நாகம் அணிந்தவன் பூந்தராய் பற்றிவாழும் பரமனைப் பாடிடப் |
3.005.7 |
புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து, திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க, விடையேறும் செல்வனான அவன், நாம் மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்.
2852 | போத
கத்தூரி போர்த்தவன் பூந்தராய் காத லித்தான் கழல்விரல் ஒன்றினால் |
3.005.8 |
யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான்.
2853 | மத்தம்
ஆனஇருவர் மருவொணா அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் |
3.005.9 |
தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திருமாலும், பிரமனும், அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடையுங்கள. அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள்புரிவான்.
2854 | பொருத்த மில்சமண் சாக்கியக் பொய்கடிந் திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப் பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை ஏந்து மான்மறி யெம்இ றையே |
3.005.10 |
வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர், புத்தர்களின் பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும் படி வீற்றிருக்கும் கடவுள், திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான்.
2855 | புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம் |
3.005.11 |
உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூந்தராய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பூந்தராய், என்னும், பூந்தராய், தலத்தில், எழுந்தருளியுள்ள, சிவபெருமானின், வினைகள், வணங்கிட, வாக்கு, வீடுபேறு, அருள்புரிவான், அணிந்து, வீற்றிருக்கும், சிவபெருமானே, அவனுக்கு, கொண்டு, ஒன்றினால், போற்றி, அருளுவான், சிவபெருமான், நீங்கும், ராய்நகர், செம்மை, சென்று, தக்கன், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருப்பூந்தராய்த், எழுந்தருளிய, திருவடிகளைத், நீங்கள், போற்றிய, நமக்கு, நீங்கிய, திருவடிகளை