ஹைக்கூ - கருப்பு நெருப்பு
- வெற்றிப்பேரொளி கொத்திக் கொத்திக் களைத்த மரங்கொத்தி விசிறும் குயிலின் குரல். அக்கிரகாரத்தில் புறப்பட்டு சேரிக்குள் நுழைந்தது மழைநீர். அப்பா கட்டிய வீடு. ஆசையாய் வருடிப்பார்த்தேன் விலைபேசி முடித்தபின். மரத்தடியில் கிளிஜோசியம் வேடிக்கைப் பார்க்கும் மரத்துக்கிளிகள். சுடுமாகுளிருமா குளத்தில் மிதக்கும் சூரியன். தாய்மடியை முட்டும் பால் குடிக்கும் கன்று பசித்தவனுக்குப் பாடம். மிதித்து விடாதே கசங்கிவிடப் போகிறது பூவின் நிழல். சுழி பார்த்து வாங்கப்படுவதில்லை அடிமாடு. ஊருக்குப் போன மனைவி. தூக்கிப்போனாள் குழந்தையுடன் தூக்கத்தையும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருப்பு நெருப்பு - ஹைக்கூ - Poems - கவிதைகள் -