ஹைக்கூ - முதலில் பூத்த ரோஜா
- தங்கம் மூர்த்தி அழகான பூக்கள். ஆனாலும் உதிர்க்கும் மரங்கள். வாகன வேகத்தை முந்தி விரைந்தோடுது மனது- காத்திருப்பாள். கோலமிடும் அம்மாவுக்கு வெள்ளைக் குடை பிடிக்கும் பனிப்படலம். கண்ணீர் துடைத்த கைக் குட்டையில் ஆறுதல் குரல். பேசிக் கொண்டிருந்தோம் நிலவும், நானும் இருட்டின் கதைகளை. மீனில்லா குளத்திலும் காத்திருக்கும் சில கொக்குகள். தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் துச்சாதன வாரிசுகள். அரிதாரம் கலைத்தபின்னும் நடித்துக் கொண்டிருக்கும் மனசு. வறண்ட குளத்தில் இறங்கி நலம் விசாரித்துப் போகும் பழைய பறவைகள். ஊரிலில்லை குழந்தைகள். புத்தகங்களுக்குள் அழுகைச் சத்தம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலில் பூத்த ரோஜா - ஹைக்கூ - Poems - கவிதைகள் -