முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
பதிற்றுப்பத்து - 20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
துறை : இயல் மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : அட்டு மலர் மார்பன்
'நும் கோ யார்?' என வினவின், எம் கோ இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின், நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! |
5 |
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும், மாற்றோர் தேஎத்து மாறிய வினையே; கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே, கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, |
10 |
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும் கடாஅ யானைக் கண நிரை அலற, வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து, புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ, விரிஉளை மாவும், களிறும், தேரும், |
15 |
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி, கடி மிளை, குண்டு கிடங்கின், நெடு மதில், நிலை ஞாயில், அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; |
20 |
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும், பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும், கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்; மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி, தண் இயல் எழிலி தலையாது ஆயினும், |
25 |
வயிறு பசி கூர ஈயலன்; வயிறு மாசு இலீயர், அவன் ஈன்ற தாயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவன், அறியலனே, வயிறு, மார்பன், மலர், வண்ணமும், அட்டு, இயல்