பரிபாடல் - 3. திருமால்
கடவுள் வாழ்த்து
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ்
திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள் மா அயோயே! மாஅயோயே! மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மா அயோயே! தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், |
5 |
திதியின் சிறாரும், விதியின் மக்களும், மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், தா மா இருவரும், தருமனும், மடங்கலும், மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் |
10 |
மாயா வாய்மொழி உரைதர வலந்து: 'வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை. |
முனிவரும் தேவரும் பாடும் வகை
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், | 15 |
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; |
20 |
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும், மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும், 'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் |
25 |
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும், ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் பாடும் வகையே: எம் பாடல்தாம் அப் பாடுவார் பாடும் வகை. |
30 |
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும் கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; நகை அச்சாக நல் அமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை, இரூ கை மாஅல் ! |
35 |
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! |
40 |
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! |
45 |
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ! |
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்- வனப்பு வரம்பு அறியா மரபினோயே! |
50 |
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர், பிறை வளர், நிறை மதி உண்டி, அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் |
55 |
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும் வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே? ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! |
60 |
ஓ!' எனக் கிளக்கும் கால முதல்வனை; ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்; சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள் தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; |
65 |
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், உறையும் உறைவதும் இலையே; உண்மையும் மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; |
70 |
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே; |
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே! அருள் குடையாக, அறம் கோலாக, இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் |
75 |
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; |
80 |
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! |
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல! காணா மரப! நீயா நினைவ! மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! |
85 |
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண பருதி வலவ! பொரு திறல் மல்ல! திருவின் கணவ! பொரு விறல் மள்ள! |
90 |
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! |
94 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல், Paripadal, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், பாடும், வாய்மொழி, தேவரும், நிலம், நிழல், மாஅல், உலகமும், செங், மாசு, முதுமொழி, முதல்வ, மள்ள, கைம், கூந்தல், என்னும், அயோயே, அனைத்தும், வரம்பு, முதல்முறை, நால்வகை, பொரு, இலையே, இவர், அறியா, தோன்றிய, முதல்வன், வேற்றுமையும், நால், விசும்பு, சேவடி, வயங்கு, பூவினுள், தாமரைப், ஞாயிறும், மலர்ந்த, பூண், பயந்தோள், கதிர், பிறப்பு, எனவும், ஆயிரம், கடவுள், இடுக்கண், களைந்த, மாயா