நற்றிணை - 83. குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
5 |
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் துஞ்சாது அலமரு பொழுதின், அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. |
எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தௌ¢ கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தௌ¤ந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே !; யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள் !
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது. - பெருந்தேவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கூகை, காதலர், யாம், விரும்பி, அசாஅம், உகிர், உடன், பழகிய, தேயா, கூர், கடவுள்