நற்றிணை - 79. பாலை
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
5 |
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?' என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- அம்ம! வாழி, தோழி!- யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? |
10 |
தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !;
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கண்ணகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாம், பிரிந்து, எம்மைக், கூறி, அரிய, வாழி, வந்து, என்று, மகளிர்