நற்றிணை - 78. நெய்தல்

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
5 |
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா வலவன் கோல் உற அறியா, |
10 |
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! |
தோழீ ! வாழி ! தௌ¤ந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !;
வரைவு மலிந்தது. - கீரங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வாய், போன்ற, வாழி, நாம், பொன், வந்து, நெய்தல்