நற்றிணை - 76. பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி, அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்!- |
5 |
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் கானல் வார் மணல் மரீஇ, கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! |
தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக !;
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது. - அம்மூவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிவந்த, மெல்லிய, தேன், மலர், காட்டு, அஞ்சாது, வால்