நற்றிணை - 55. குறிஞ்சி

ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி, உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள் பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், |
5 |
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும் இனையையோ?' என வினவினள், யாயே; அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து, என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த |
10 |
சாந்த ஞெகிழி காட்டி- ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே. |
ஓங்கிய மலைநாடனே ! நீ கூறும்வாய்மைகள் எல்லாம் இப்படியே பொய்த்தொழிவனவாகுக !; மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறிய வழியில் இரைதேடியுழலுகின்ற வேங்கை முதலாயமிக்க பகையைப் பொருட்படுத்தாது; இரவிடைவந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ, அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே; எம் அன்னை தன் கண்களாலே கொல்லுபவள் போல் நோக்கி "நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பெற்ற தோளினையுடையையோ?" என்று வினவினள்; அங்ஙனம் வினவலும், இவள் அதற்கு எதிர்மொழி சொல்ல அறியாளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்; அதனை அறிந்த யான் இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறி யுய்குவள் என்றெண்ணி அன்னையை நோக்கி; அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டி; அன்னாய் ! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண் ! என மறைத்துக் கூறினேன்; இங்ஙனம் எத்துணை நாள் நீ வரைந்து கொள்ளுதல் காரணமாகப் பொய்கூறி யுய்விப்பது
?
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது. - பெருவழுதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நோக்கி, இவள், மறைத்துக், இவளுடைய, அன்னாய், வினவினள், காட்டி