நற்றிணை - 398. நெய்தல்
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; |
5 |
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன், சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர் சொல்லாள் மெல்லியல், சிலவே- நல் அகத்து யாணர் இள முலை நனைய, மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. |
10 |
அச்சஞ் செய்கின்ற அணங்கும் மறைத்துறையாதபடி இயங்கா நிற்கும்; விரிந்த கதிர்களையுடைய ஆதித்த மண்டிலமும் மேலைத்திசையிலே சென்று மறையாநிற்கும்; ஓரையாடிய மகளிர் தாமும் நீர் அலைத்தலாலே கலைந்த கூந்தலைப் பிழிந்து வடித்துத் துவட்சியுற்று அழகிய வயிற்றில் அறைந்துகொண்டு ஒருசேரக்கூடித் தம்மூர் புகுவாராயினர்; அன்னதொரு பொழுதில் யாம் பலவாய மலர்களையுடைய நறிய சோலையிடத்தே நின் காதலியைப் பாராட்டிச் 'சேயிழாய்! யாம் முன்னே செல்லா நிற்போம் வாராய்!' என்று கூறினேமாக; அங்ஙனம் கூறுதலும் மெல்லிய சாயலையுடைய அவள்; தன் நல்ல மார்பின்கண்ணே காணுந்தோறும் புதியனவாகத் தோன்றுகின்ற இளைய கொங்கைமுகடு நனையும்படி; மாட்சிமைப்பட்ட குளிர்ந்த கண்கள் தௌ¤ந்த நீர்கொண்டு வடியாநிற்ப; யாம் கூறியதற்கு எதிர்; சிலவாய மொழியுங் கூறினாளில்லை ஆதலின்; இன்னதொரு தன்மையுடையாளை நீயே ஆற்றுவித்துச் செல்வாயாக!
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 396 | 397 | 398 | 399 | 400 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம், எதிர், நீர்