நற்றிணை - 377. குறிஞ்சி

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி, கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி, பண்ணல் மேவலமாகி, அரிது உற்று, அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- |
5 |
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல, அளகம் சேர்ந்த திருநுதல் கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே? |
அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ?
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது. - மடல் பாடிய மாதங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 375 | 376 | 377 | 378 | 379 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சேர்ந்த, அகல்