நற்றிணை - 356. குறிஞ்சி
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
5 |
அசைவு இல் நோன் பறை போல, செல வர வருந்தினை- வாழி, என் உள்ளம்!- ஒரு நாள் காதலி உழையளாக, குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? |
என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தௌ¤ந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய; ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னப்பறவைகள்; பொன்பொருந்திய நெடிய கொடுமுடிகளையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற தேவருலகின்கண் வாழும்; தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய; சிறகு முளைத்து வளராத தம் இளம் பார்ப்புகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லுகின்றபொழுது; அவற்றின் வருந்துதலில்லாத வலிய சிறகு வருந்தினாற்போல; பலகாலும் என்பால் நின்றும் அவள்பால் ஏகுதலாலே நீ வருந்தாநின்றனை; அதனை யான் நன்கு அறிவேன் காண்! இங்ஙனம் வருந்தியதன் பயனாக இனி மற்றொரு பொழுதிலாயினும் கீழ்பாற்கண் விடியலிலே தோன்றுகின்ற வெள்ளிபோல; நங் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?; அதனையேனும் ஆராய்ந்து கூறுவாயாக!
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 354 | 355 | 356 | 357 | 358 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறகு, காதலி