நற்றிணை - 260. மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
5 |
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! |
10 |
கழுநீர் மலரை மேய்ந்த பெரிய (கரிய) காலையுடைய எருமை அயலிலுள்ள வயலிலே படர்ந்த தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்துவிட்டு; கையிலே தடிகொண்ட வீரரைப்போலச் செருக்கி நடந்து அதன் பக்கத்துள்ள குன்று போலக் குவிந்த வெளிய மணலின்மீது துயிலாநிற்கும் ஊரனே!; நீ இப்பொழுது விருப்பமுடையாய் போலப் பலகாலும் என்னைத் தழுவிக் கொள்கின்றனை; பகை மிகுதலாலே ஆண்டு வந்த பகைவரை யழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய 'விராஅன்' என்பவனது நிறைந்த "புனல்வாயிலை" அடுத்த "இருப்பையூர்" போன்ற என்னை விட்டொழிதலானே; என்னுடைய தழைத்த பலவாகிய கூந்தல் அழகு பெற அலங்கரித்த அரும்பு மலர்ந்த பூமாலை வாடும்படி செய்த மிக்க பகைவனல்லையோ?; யான் நின் செய்கையை மறந்திருப்பேனல்லேன் காண்; ஆதலின் என்னைத் தொடாதே கொள்;
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 258 | 259 | 260 | 261 | 262 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கூந்தல், யான், என்னைத், குன்று, சேர், மேய்ந்த, எருமை, கழுநீர்