நற்றிணை - 249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
5 |
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, அம்பல் மூதூர் அலர் எழ, |
10 |
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? |
இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும்¢ பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கனது தேர்¢ முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?;
வரைவிடை மெலிந்தது. - உலோச்சனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 247 | 248 | 249 | 250 | 251 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்ன, விளங்கிய, புலி, கொண்ட, புன்னை