முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 232. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 232. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தலைவர் நம்மை நினைத்திலர்போலும்!” எனக் கவன்ற தலைவியை நோக்கி, “அவர் நினையாமலிரார்;வினை முற்றாமையின் வந்திலர்” என்று தோழி கூறியது.)
உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும் வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ மரற்புகா வருந்திய மாவெருத் திரலை உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய யாஅ வரிநிழல் துஞ்சும் |
5 |
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. | |
- ஊண் பித்தையார். |
முடிபு: தோழி, மலையில் இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும்வாய்ப்பு உணர்வின்மையின் வாரார்கொல்?
கருத்து: தலைவர் வினை முற்றாமையின் வந்திலர்; விரைவில்வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 230 | 231 | 232 | 233 | 234 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 232. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வினை, கூற்று, குறுந்தொகை, பாலை, கொல்லோ, பெரிய, உடைய, உள்ளார், நம்மை, எட்டுத்தொகை, சங்க, முற்றாமையின்