முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 188. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு தகைமுற் றினவே தண்கார் வியன்புனம் வாலிழை நெகிழ்த்தோர் வாரார் மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே. |
|
- மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார். |
முடிபு: முல்லை முகை முற்றின; புனம் தகை முற்றின; மாலைவந்தன்று; இழை நெகிழ்த்தோர் வாரார்.
கருத்து: கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று, முல்லை, இலக்கியங்கள், தலைவி, தலைவர், குறுந்தொகை, கூற்று, வாரார், முற்றின, நெகிழ்த்தோர், முதிர்ந்தன, இன்னும், எட்டுத்தொகை, சங்க, வந்திலர், றினவே