முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 107. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 107. மருதம் - தலைவி கூற்று
(பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக் கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர் |
5 |
யாணர்ஊரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் எடுப்பி யோயே. |
|
- மதுரைக் கண்ணனார். |
முடிபு: சேவல், துயில் எடுப்பியோய்; நீ கடுநவைப்படீஇயர்.
கருத்து: பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 107. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, சேவலே, துயிலினின்றும், சேவல், சங்க, எட்டுத்தொகை, பொழுது, புலர்ந்தமையால்