கலித்தொகை - மருதக் கலி 85
காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல் மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல் தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை; | 5 |
கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி; பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த, பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் | 10 |
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்; சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல் சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக, அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண, | 15 |
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை; ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின் செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப் பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ, | 20 |
செம்மால்! நின் பால் உண்ணிய; பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார் நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும் நுந்தைபால் உண்டி, சில; | 25 |
நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக, பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா ஞாயர்பால் உண்டி, சில; அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத் தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை | 30 |
வருக என்றார், யார்கொலோ, ஈங்கு; என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என் பாராட்டைப்பாலோ சில; செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை | 35 |
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பால், நின், மேல், ஈங்கு, உண்டி, சுரும்பு, அவிர், பிறவும், காழ்