அகநானூறு - 81. பாலை
| நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
5 |
| மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
10 |
| செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் மை எழில் உண்கண் கலுழ ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
15 |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -

