ஞானக்குறள் - 25. சூனிய காலமறிதல்
நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில் அரவணை யானாகு முடம்பு. |
241 |
உருவந் தழலாக வுள்ளத்தே சென்று புருவத் திடையிருந்து பார். |
242 |
புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கு முடம்பு. |
243 |
அகம்புறம் பேராப் பொருளை யறியில் உகம்பல காட்டும் உடம்பு. |
244 |
ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின் ஓவிய மாகு முடம்பு. |
245 |
அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின் துஞ்சுவ தில்லை யுடம்பு. |
246 |
தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால் மாயாது பின்னை யுடம்பு. |
247 |
தானந்த மின்றித் தழலுற நோக்கிடில் ஆனந்த மாகு முடம்பு. |
248 |
ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில் அழிவின்றி நிற்கு முடம்பு. |
249 |
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில் முற்று மழியா துடம்பு. |
250 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
25. சூனிய காலமறிதல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - முடம்பு, யுடம்பு, பொருளை, திடையிருந்து, புருவத், நிற்கு