ஞானக்குறள் - 16. முத்தி காண்டல்
மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது. |
151 |
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில். |
152 |
உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும் அருவமுந் தானதுவே யாம். |
153 |
தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது. |
154 |
பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு. |
155 |
அனைத்துருவ மாய வறிவை யகலில் தினைத்துணையு மில்லை சிவம். |
156 |
துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி அணிதா ரிரண்டு விரல். |
157 |
மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண் டங்காதி நிலை. |
158 |
தற்பர மான சதாசிவத்தோ டொன்றில் உற்றறி வில்லை யுயிர்க்கு. |
159 |
உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு. |
160 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
16. முத்தி காண்டல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - மில்லை