'கர்ப்பிணிக்கு காட்டன் சேலைதான்!'

பிரசவத்துக்கு வரும் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி... படிக்காதவர்களாக இருந்தாலும் சரி.... பெரும்பாலும் நைட்டி அணிந்தபடிதான் வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்ய இந்த உடை பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். மேலும், சிலர் உள்ளாடைகளும் அணிந்திருப்பதில்லை. பருத்த வயிறுடனும் கனத்த மார்பகங்களுடனும் வரும் கற்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் உள்ளவர்களையும் சிரமப்படுத்துகிறார்கள்.
பிரசவம் ஆன பிறகும்கூட நைட்டியை இவர்கள் கழற்றுவதில்லை. நைட்டி வழியாக குழந்தைகளுக்கு பால் கொடுக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பிரசவ காலங்களில் பருத்தியினால் ஆன சேலையும். ஜாக்கெட்டும் அணிவதுதான் நல்ல ஆரோக்கியம் தரும். நைட்டி என்பது இரவில் மட்டுமே அணியவேண்டிய உடை என்பதை இனியாவது நம் பெண்கள் உணரட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
'கர்ப்பிணிக்கு காட்டன் சேலைதான்!', நைட்டி, பெண்கள், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி