தங்கக் கொலுசு
''தங்கக் கொலுசு போட்டா அவங்க குடும்பமே மவுசு குறைஞ்சு போயிடும்'' என்று சொல்லப்படுவதுண்டு.
நடிகையர் திலகம் சாவித்திரி, ''ஓஹோ''வென்று புகழும் பணமும் புரண்டு கொண்டிருந்த நேரத்தில், தங்கக் கொலுசு அணிந்ததால்தான் அவருக்கு அடுத்தடுத்து தோல்விகளும் ஆனது என்று சொல்லப்படுவதுண்டு.
இந்த சென்டிமெண்டெல்லாம் நிஜமாகவே உண்மைதானா?
பிரின்ஸ் ஜூவல்லர்ஸ் அதிபர் பிரின்ஸ் சொன்னார்.
''இந்த மாதிரி ஒரு சென்டிமெண்ட் இருந்தாலும் ஒரு பக்கம் தங்கக் கொலுசுகள் அதுபாட்டுக்கு விற்பனை ஆகிக்கிட்டேதான் இருக்கு....
பொதுவாக கல்லூரி மாணவிகள், சினிமா நட்சத்திரங்கள், ஹைகிளாஸ் பெண்கள் அதிகமாக இதை வாங்கறாங்க.
குழந்தைகள் வெள்ளிக் கொலுசுடன் நடமாடும்போதே ''திருகாணி சரியா இருக்கா....'' என்று அம்மாக்கள் அடிக்கடி கொலுசு பத்தி விசாரிச்சுக்கிட்டே இருப்பாங்க. வெள்ளிக் கொலுசிலிருந்து ஒரு முத்து தொலைஞ்சிட்டாலே பதறிப்போறப்போ, தங்கப் கொலுசு காணாமல் போனா என்னாகிறதுன்னு யோசிச்சுதான் தங்கக் கொலு தேவை இல்லைனு தவிர்த்திருப்பாங்க போல'' என்றார்.
பிரபல சினிமா நடிகர்கள். அரசியல்வாதிகள் வீடுகளில் எல்லாம் கணபதி ஹோமம் போன்ற சுபகாரியங்களை நடத்தி வைக்கும் ரோஹ’ணி சாஸ்திரிகளோ, ''தங்கத்தை கண்டிப்பாக கால்ல போடக்கூடாது!'' என்கிறார்.
''தங்கத்தை ஸ்வர்ணலட்சுமின்னு தான் குறிப்பிடறது வழக்கம். லட்சுமியை கால்ல போடறது அத்தனை நல்லதில்லை. டாய்லெட்டுக்குப் போறோம். சாலையோர மழைநீர், சாக்கடை நீர் காலில் தெறிக்கிறது. அதனாலெல்லாம்தான் ஸ்வர்ணத்தை காலில் அணிவதைத் தவிர்க்கிறோம்!'' என்கிறார் ரோஹ’ணி சாஸ்திரிகள்.
இப்போது தங்கம் போல் ''லுக்'' தரக்கூடிய கொலுசுகள் நிலைய வந்துவிட்டன. முக்கியமாக - விலையும் கம்மி!
தேடல் தொடர்பான தகவல்கள்:
தங்கக் கொலுசு, கொலுசு, தங்கக், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி