அழகுக்கலை கற்க...
பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க மிக எளிய வழி...
அழகுக் கலை பயில விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக்கலை பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறுவதுதான் புத்திசாலித்தனம். அதுவும் அழகுக் கலையில் பல ஆண்டு அனுபவ முள்ளவர்களிடம் பயின்றால் முழுமையான பயிற்சியை மிக விரைவில் பெற்று சிறந்து விளங்க முடியும்.
அழகுக்கலையை பயில்வதற்கு கல்வித்தகுதி அவசியமே இல்லை. சிறிது அழகுணர்ச்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். அழகுக்கலை நிபுணர்கள் அத்தனை வகையான டெக்னிக்கையும் மிக சிம்பிளாகச் சொல்லித் தருகிறார்கள்.
பியூட்டி பார்லர் திறக்கக் கடன் வசதி கூட பெற்றுத் தரப்படுகிறது. இப்போதெல்லாம் நிறைய பெண்கள் வேலைக்குப் போக தொடங்கி இருப்பதால், அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரம் இருப்பதில்லை. அதனால்தான் சமீப காலமாக அவர்கள் அழகு நிலையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிடும். அப்போது அழகு நிலையங்களும், அழகுக் கலை நிபுணர்களும் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.
ஆகவே நீங்கள் ஒரு வேளை வீட்டில் முடங்கி இருந்தால் இந்த சுயதொழிலை கற்று முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழகுக்கலை கற்க..., அழகுக், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி