மிக்ஸி பிளேடை கூராக்க...
மிக்ஸி பிளேடை கூராக்க...
அவ்வப்பொழுது மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு பெரிய உப்பைப் போட்டு மிக்ஸியை சுழலவிட்டால் பிளேட் முனை கூறாக இருக்கும்.
கரண்ட் இல்லாத நேரங்களில் அயர்ன்பாக்ஸ் உபயோகிப்பது...
கரண்ட் இல்லாத நேரங்களில் துணிகளை அயர்ன் பண்ண, காஸ் அடுப்பில் அயர்ன் பாக்சை சூடுபடுத்தி பிரமாதமாக அயர்ன் பண்ணலாம். ரிப்பேராகி தூக்கிப் போட்டுள்ள அயர்ன் பாக்ஸை தேடி எடுங்கள். இம்முறையில் அயர்ன் பண்ணலாம்.
குக்கர் கேஸ்கட் நீண்ட நாள் உழைக்க...
குக்கரில் முக்கியமானது கேஸ்கட் குக்கரை சமையலுக்கு பயன்படுத்தி கால்மணிநேரம் கழித்து கேஸ்கட்டை தண்ணீரில் போட வேண்டும். கேஸ்கட்டை சுத்தப்படுத்தி தனியாக வைக்க வேண்டும்.
புத்தகங்களில் எண்ணெய் பட்டுவிட்டால்...
புத்தகங்கள், செய்தித்தாள் போன்றவற்றில் எண்ணெய் பட்டுவிட்டால் உடனே கோலமாவை அந்த இடத்தில் மொத்தமாகத் தூவினால் எண்ணெய் உறிஞ்சப்பட்டு சில மணி நேரங்களில் எண்ணெய் கறை அகன்றுவிடும்.
காஸ் லைட்டர் நீண்ட நாட்கள் நீடித்துவர...
காஸ் லைட்டரை ஒவ்வொரு முறையும் உபயோகித்த பிறகு அதற்குரிய ஸ்டாண்டிலேயே நிற்க வைத்தால் நீண்ட நாள் கெடாமல் பயன்படும். அடுப்பு மேடையின் மேல் படுக்கவைக்க கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மிக்ஸி பிளேடை கூராக்க..., அயர்ன், எண்ணெய், நீண்ட, காஸ், நேரங்களில், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி