பூச்சிகளிடமிருந்து விடுதலை

பீரில் நனைத்த கோணியை ஒரு நாள் இரவு முழுக்க சமையலறையில் போட்டு வையுங்கள். கரப்பான் பூச்சிகள் அனைத்தும் அதில் தஞ்சம் புகும். காலையில் அகற்றி விடலாம்.
எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா? ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, அறையின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். பூச்சிகள் காணாமல் போகும்.
கொசுவர்த்தி, மேட் என எதற்குமே அஞ்சாமல் கொசுக்களின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறதா? மண்ணெண்ணெய் அல்லது பேகானில் அகர்பத்திகளை நனைத்து ஏற்றி வைத்தால் பிரச்சினை தீரும்.
சர்க்கரை டப்பாவினுள் இரண்டு, மூன்று கிராம்புகளைப் போட்டு வையுங்கள். எறும்புகள் அண்டாது.
ரவையை மெல்லிய துணியில் கொட்டிப் பரப்பி, அரை மணி நேரம் கழித்து சலித்து எடுங்கள். புழுக்கள் எல்லாம் துணியோடு ஒட்டிக் கொண்டு போய் விடும்.
காய்ந்த புதினா இலைகளை அரிசிக்குள் போட்டு வைக்க, பூச்சிகள் வராது. சாதமும் வாசனையாக இருக்கும்.
பருப்பு வைத்துள்ள டப்பாவில் சிறிய துண்டு பெருங்காயம் போட்டு வைக்க, வண்டு வராது.
காய்கறிகளை நறுக்கிப் போடும் தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து வந்து விடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூச்சிகளிடமிருந்து விடுதலை, போட்டு, பூச்சிகள், வைக்க, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி