சேமியுங்கள்...

தினம் ஒரு குறிப்பிட்ட தொகையை வீட்டுச் செலவுக்காக ஒதுக்குங்கள். அதற்குள் செலவு அடங்கும் போது மீதித் தொகையை சேமிப்பில் ஒதுக்குங்கள்.
மாதா மாதம் பட்ஜெட் போடுகிற பழக்கத்தை கட்டாயமாக்குங்கள். வரவு செலவுகளைப் பைசா தவறாமல் உடனடியாக எழுதி வையுங்கள்.
அந்தந்த வேளைக்கு ஏற்ப சமைப்பதைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆஃபீஸ்ல மீட்டிங், ஃப்ரெண்டோட பர்த்டே என்றெல்லாம் காரணம் சொல்லி வீட்டிலிருப்பவர்கள் சாப்பாட்டைத் தவிர்த்தாலும் பிரச்சினை இல்லை.
வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து எப்போதாவது வெளியே சாப்பிட நினைப்பது சகஜம்தான். ஆனால் அதை அடிக்கடிப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டாம். ஒருவருக்கு வெளியே சாப்பிட ஆகிற செலவில் ஒரு குடும்பமே வீட்டில் செய்து சாப்பிடலாம்.
கொஞ்சம் காசு சேர்ந்தாலும் உடனே நகை வாங்கும் ஆசாமியா நீங்கள்? ஆபரணமாக வாங்குவதைவிட, நாணயமாக, தங்கக் கட்டியாக வாங்கி சேமிப்பது புத்தி சாலித்தனம்.
உங்கள் வீட்டுக் குழந்தைக்குக் கூட சேமிக்கிற பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதன் சேமிப்பில் சேர்கிற தொகையைக் கொண்டு குழந்தைக்குத் தேவையான பொருள் வாங்கிக் கொடுங்கள். தன் சேமிப்பில் வாங்கிய பெருமையில் குழந்தை திளைக்கும். சேமிக்கும் பழக்கத்துக்கு ஊக்கமாகவும் இருக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேமியுங்கள்..., சேமிப்பில், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி