பெண்களும் சட்டமும்

ஆபாசப் புத்தகம், விளம்பரம்
பிரிவுகள் 292, 292 ஏ, 293, 294 என்ன சொல்கின்றன?
ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஒவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன. ஆபாச விளம்பரம் செய்வதை தடை செய்கிறது. ஆபாச செயல்கள், பாடல்கள், இவற்றை தடை செய்கிறது.
தண்டனை என்ன தெரியுமா?
பிரிவு 292 இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 292ஏ குறைந்த அளவு தண்டனை ஆறு மாதச் சிறைக்காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்படாமல் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 293 ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 294 மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அபராதம் அல்லது இரண்டும்.
1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்தது.
இன்று ஆபாச விளம்பரங்கள் இல்லையா? பாடல்கள் இல்லையா? செய்கைகள் இல்லையா? பெண்ணை அலங்காரச் சின்னமாகவும், போகப் பொருள்களாகவும் பார்த்தே பழகிவிட்ட இந்த கலாச்சார அமைப்பிலே சட்டங்கள் பெரிதாக என்ன செய்து விடும்
--*--*--
பெண்ணை அவமதித்தல்
பிரிவு 354 :ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்றக் கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
தண்டனை: இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
--*--*--
கட்டாயத் திருமணம்
பிரிவு 366: ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று தெரிந்திருந்தும், கவர்ந்து செல்வது, அல்லது கடத்திச் செல்வது குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும்.
பிரிவு 366ஏ: பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டாயப் புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும்.
--*--*--
விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்
பிரிவு 373 : பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை, எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறைகேடான புணர்ச்சி அல்லது வேறு சட்ட விரோத அல்லது ஒழுக்கக்கேடான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய நிலைக்கு பலியாகலாம் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்குப் பெறுவதும் அல்லது வேறு எந்த வகையிலாவது தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றமாகும்.
தண்டனை : பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும். இன்று இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள். இந்த சட்டங்கள் இருந்தும் இந்நிலைக்கு என்ன பதில் சொல்ல?
ஹசினா என்ற 9 வயது சிறுமி, பெங்களூர் நகரத்தின் ஒரு சுமாரான குடும்பத்தைச் சார்ந்தவள்: தந்தையைச் சமீபத்தில் இழந்து விட்டாள். அவளுடைய உறவினர் ஒருவர் அவளுக்கு வீட்டு வேலை ஒன்று வாங்கி தருவதாக வாக்களித்து பம்பாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஹசினாவை காமத்திபுரா (பம்பாயில் அதிகமாக விபச்சாரம் நடக்கின்ற இடம்) என்ற இடத்தில் விற்று விட்டார். இங்கே இந்த 9 வயது இளஞ்சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டாள்: பல இரவுகள் தொடர்ந்து இவ்வாறான கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். அவள் இந்தத் தொழிலை முற்றிலுமாக வெறுத்தாள். ஆனால் இதிலிருந்து தப்பித்துச் செல்வதற்குத் தான் வழி தெரியவில்லை. மெதுவாக அவள் போதைப் பொருட்களை எடுக்கும் பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். இன்று அவள் போதை மருந்தை வாங்குவதற்காகப் பணம் ஈட்ட எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள். இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளோ?
--*--*--
பலாத்காரம் (வன்முறைப்புணர்ச்சி)
பலாத்காரம் என்றால் என்ன?
பிரிவு 375: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட 6 சூழ்நிலைகளில் உடல் புணர்ச்சிக் கொண்டால் பலாத்காரம் ஆகும்.
1 அவளுடைய விருப்பத்திற்கு மாறாக
2 அவளுடைய சம்மதமின்றி
3 அவருக்கு அல்லது அவளுக்க நெருக்கமான ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படம் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று.
4 அவளுடைய சம்மதத்துடன் அந்த ஆள் தான் முழுமையாக அவளுடைய கணவன் இல்லையென்று தெரிந்த போதிலும் அந்தப் பெண்தான் அவளுடைய சட்டப்பூர்வமான மனைவி என்று நம்பியிருக்கும் போது.
5 அவளுடைய சம்மதத்துடன் - அந்த சம்மதம் புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும் போது பெறப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளில் அவளுடைய சம்மதத்தின் தன்மையையோ, விளைவுகளையோ அவளுக்கு புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது.
6 இவளுடைய சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்.
மதுரா வழக்கு மதுரா என்ற 15 வயது பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்தக் குற்றவாளிக் காவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த பெண் எதிர்த்துப் போராடியதற்கான எந்த ஒரு அடையாளமும் அவளது உடலில் இல்லை .
அவள் உதவிக்கு யாரையும் கூச்சலிட்டு அழைக்கவில்லை .
ஏற்கனவே இவள் காதலுடன் உடல் புணர்ச்சிக் கொண்டிருக்கிறாள்
இதனைக் கேள்விக் கேட்டு எதிர்த்து பல பெண் விடுதலை இயக்கங்கள் குரல் எழுப்பின. போராடின இதன் விளைவாக 1983-ல் இந்தப் பிரிவில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவு 376 சொல்கின்றது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நபர்களல்லாத பிறர் செய்யும் பலாக்காரத்திற்கு குறைந்த பட்சம் 7 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1. போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
2. சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர்கள் பலாத்காரம் செய்தல்.
3 பெண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு உள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
4 கற்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
5 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
6 குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இக்குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இதை நாம் ஆழமாக சிந்தித்தால், விவாதித்தால் இது எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான வன்முறை என்று கருதுவதே இல்லை என்பது புரியும். சமுதாயம் இதை ஆண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் ஒரு குற்றமாகவே பார்க்கின்றது.
--*--*--
பிறர் மனை சேர்க்கை
பிரிவு 497 பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவளுடன் உடல் புணர்ச்சி செய்வது''பிறர் மனை சேர்க்கை'' என்ற குற்றமாகும்.
முக்கிய அம்சங்கள்
1 கணவனுடைய அனுமதி இருக்கக் கூடாது.
2 இதன் கீழ் குற்றம் செய்யும் ஆண் மகன் மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாவான். பெண்ணை தண்டிக்க இயலாது.
3 பெண்ணின் கணவன் தான் புகார் செய்ய வேண்டும். இதில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - கணவனுடைய அனுமதியோடு ஒத்துழைப்போடு மனைவி பிற ஆணுடன் உடல் புணர்ச்சி கொண்டால் அதை என்ன செய்வது? இவ்வாறு தானே பல ஆண்கள் திருமணம் என்ற பெயரில் ''பெண்ணை'' மணந்து கொண்டு விபச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மனைவிக்கு வயதானவுடன், இளமை போனவுடன் அழகு குறைந்தவுடன், இனிமேல் தொழிலுக்கு உதவாதவள் என்று கருதும் பொழுது என் அனுமதியின்றி இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்று கூறி அடித்துத் துரத்துகின்றனர். இதற்கெல்லாம் வழி வகுக்கின்றதே இச்சட்டங்கள்.பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் பெண்ணால் அழிந்தன என்று வரலாறு கூறுகின்றது. அவை பெண்ணால் அழிந்தனவா? அல்லது பெண்கள் மீது ஆண்கள் கொண்ட உடைமை உணர்வால் அழிந்தனவா? அதே உடைமை உணர்வு நமது சட்டங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவினாலும் மக்களிடையே பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தண்டனை : ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண்களும் சட்டமும், அல்லது, பெண், கொண்டு, பிரிவு, அவளுடைய, பெண்ணை, என்ன, பலாத்காரம், தண்டனை, தான், ஆண்டுகள், அவள், சட்டம், செய்து, இன்று, கீழ், திருமணம், குற்றமாகும், எந்த, சிறைக்காவல், இரண்டும், அபராதம், நமது, இவ்வாறு, அந்த, செய்தல், அரசு, இந்தப், என்பது, உடல், பெண்கள், வேண்டும், செய்யும், கருவிலேயே, அபராதமும், எதிர்த்து, சட்டத்தின், இருக்கும், பரிசோதனை, குழந்தைகள், ஆண்டு, மகாராஷ்டிரா, கூறுகின்றது, நாம், கருத்துடன், வயது, மாநில, கொலை, ஆபாச, குறைந்த, உடைமை, செய்வது, பெண்ணைப், உட்படுத்தப்பட்டாள், பத்து, இல்லையா, கொடுக்கின்றது, வேறு, புணர்ச்சி, தெரிந்திருந்தும், இரண்டு, வழக்கு, கணவன், பிறர், இருந்தால், இவள், பதில், கனகா, அங்கே, மனித, சட்டங்கள், கொள்ள, சட்டப், ஒருவர், பொழுது, பணம், அனைத்தையும், இங்கே, சமுதாயத்தின், சமுதாயம், இந்தியாவில், தண்டனைச், மற்ற, உள்ள, ஏற்கனவே, மாநிலங்கள், இந்திய, இல்லை, ஆண்கள், என்பதை, செய்யலாம், தொடர்ந்து, முடியாத, செய்ய, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி