நகைகள் பளபளக்க!
தங்கம் அழகை உயர்த்துவது மட்டுமல்ல...
உங்கள் வாழ்க்கைத் தரத்திற்கான ஒரு அடையாளமாகவும் மாறிவிட்டது.
தங்கத்தை விரும்பாத மங்கையர் யாருமில்லை. தங்க நகைகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். உங்கள் நகைகளைப் பாதுகாக்க இதோ நாங்கள் தரும் சில டிப்ஸ்!
நகைகளை அணியும் முன்பே மேக்-அப் செய்து கொள்ளவும். ஏனெனில் , பவுடர் மற்றும் ரூஜின் சிறு துளி கூட தங்கத்தின் பளபளப்பைக் குறைத்து விடும்.
ஸ்ப்ரே செண்ட், நகப் பூச்சு படாமல் நகைகளை பார்த்துக் கொள்ளவும்.
முத்துக்கள் மீது நகப் பூச்சு பட்டால் முகத்தின் மேல் பகுதி சிதைந்து விடும்.
எப்படி சுத்தம் செய்வது?
மிருதுவான பருத்தித் துணியையோ அல்லது கடைகளில் விற்கும் மினரல் வாட்டரையோ பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை சோடா பை கார்பனேட் போட்டு அதில் தங்க நகைகளைப் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து மென்மையான துணியால் துடைக்கவும். நகை பளபளப்பாகும்.
தங்கம் மற்றும் கலா ரசனையான பொருட்களைக் கூட மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.
செய்யக்கூடாதது ...
நகைகளை சிறிய டப்பாக்களில் போட்டு வைக்காதீர்.
பிற உலோக நகைகளை தங்கம் மற்றும் வெள்ளி நகையோடு சேர்த்து வைக்காதீர்.
சொக்கத் தங்க நகைகள் மற்றும் கற்கள் பதிக்கப் பட்ட, நகையை கொதிக்கும் நீரில் போடாதீர். நல்ல பருத்தி துணிக் கொண்டு சுத்தம் செய்யவும்.
நகைகளை சுத்தம் செய்ய சோப் - சர்ஃப் பவுடர் மற்றும் டூத்பேஸ்டை உபயோகிக்காதீர், குளோரின் தங்கத்தின் மேல் பகுதியை பாதிக்கும்.
குறிப்பு :
நகைகளை வெல்வெட் மற்றும் சாட்டின் லைனிங் செய்யப்பட்ட டப்பாக்களிலேயே வைக்கவும்.
தனித்தனி டப்பாக்களில் அவற்றை வைப்பது சிறந்தது.
ஒவ்வொரு நகையையும் பயன் படுத்துவதற்கு முன்பும் பின்பும் தூய்மையான துணியால் துடைக்க மறக்காதீர்.
நகைகளை பீரோவில் வைப்பதற்கு முன்பு, ட்ரேசிங் பேப்பரால் சுற்றி பிறகு துணிகளால் சுற்றி வைக்கவும், பிங்க் நிற ட்ரேசிங் பேப்பர், அலமாரியின் துருவில் இருந்து நகையைப் பாதுகாக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நகைகள் பளபளக்க!, நகைகளை, சுத்தம், துணியால், போட்டு, செய்யவும், தங்கம், தங்க, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி