கல்யாணம் நெருங்குதா.. ?

முதல் வேலையாக குடும்பத்தில் உள்ள எல்லாருமாகச் சேர்ந்து உட்கார்ந்து கல்யாணச் செலவுகளுக்கான பட்ஜெட்டைப் போடுங்கள். அதில் 25 சதவிகிதம் கூடுதலாகப் போட்டு, தனியே வையுங்கள். எதிர்பாராத செலவுகளுக்குக் கை கொடுக்கும்.
அழைப்பிதழ்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தயாராக இருக்கட்டும். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாக தபாலில் அனுப்ப வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரட்டும்.
கல்யாணத்துக்கான துணிகளை ஒரு மாதம் முன்பே வாங்கிவிடவும். ஜாக்கெட் தைக்கக் கொடுப்பது, அது சரியில்லாமல் அவதிப்படுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
பியூட்டி பார்லர் போகிற பழக்கமிருந்தால், இரண்டு மாதங்களுக்கு முன்பே போய் உங்களுக்கு மிக அழகாகப் பொருந்தக் கூடிய ஹேர் ஸ்டைலையும், மேக்கப்பையும் செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
வெளியில் உணவுக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன் கூட்டியே அதை ருசித்துப் பார்ப்பது நல்லது. ஹோட்டலில் ஆர்டர் செய்வதாக இருந்தால், குடும்பத்துடன் அந்த ஹோட்டலில் கல்யாணத்துக்கு முன்பே ஒரு முறை சாப்பிட்டுப் பார்க்கலாம்.
திருமண ஃபோட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றுக்கு நீங்கள் வெளியே ஏற்பாடு செய்திருந்தாலும், உங்கள் குடும்பத்தார், நண்பர் என யாரையாவது தனியே எடுக்கச் சொல்வது பாதுகாப்பு.
திருமணத் தேதியை நிச்சயம் செய்கிற போது, உங்கள் மாத விலக்கு தேதி, உங்கள் குடும்பத்தாரின் பிறந்த நாள், கல்யாண நாள், மணமகன் வீட்டாரின் வசதி போன்ற எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நிச்சயம் செய்வது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல்யாணம் நெருங்குதா.. ?, உங்கள், முன்பே, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி