வாசனை திரவியம்

தற்போது பல வகையான நறுமணப் பொருட்களும், நாற்றம் நீக்கிகளும் டியோடரண்ட் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.
இவற்றை பூசுவதால் உடலில் எந்தநேரமும் ஒருவித நறுமணம் வீசுகிறது. இதனால் நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
நேரடியாக உடலின் தோலில் பூசுவது டியோடரண்ட். இதை ஆடைகளின் மேல் பயன்படுத்துவதில்லை. வியர்வை மூலம் பாக்டீரியாவால் ஏற்படும் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த டியோடரண்ட் உதவுகிறது. வியர்வை உற்பத்தியாவதை இது தடுக்காது.
குளித்த பின் 15 நிமிடங்களுக்குப் பிறகு டியோடரண்டை பயன்படுத்தினால், நீண்ட நேரம் நறுமணம் வீசும்.
வெளியில் செல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக டியோடரண்டை பயன்படுத்துவது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசனை திரவியம், டியோடரண்ட், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி