அனிலாவின் உலக சாதனை

உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவி அனிலாமடிராஜூவின் சாதனையை பார்த்து வியந்து போயிருக்கிறார்கள்.
கேன்சர் செல்கள் தற்கொலை செய்து கொள்ளும் முறையை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நிரூபித்து காட்டியிருக்கிறார் அனிலா.
அமெரிக்காவில் ஓஹ’யோவில் நடந்த இண்டல் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இதை செய்து காட்டி பரிசையும் பெற்றிருக்கிறார் அவர்.
ஆர்.என்.ஏ., இண்டர்பியரன்ஸ் எனும் தொழில் நுட்பம் புற்றுக்கான ஜீன்களை தேர்ந்தெடுத்து அழிக்கிறது. இது மருத்துவ உலகில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் மான்ட்ரியலில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியான அனிலா. சில வகையான புற்று செல்களை அழிக்கும் என்பதை நிரூபித்து 2003 அறிவியல் விருதை பெற்றுள்ளார்.
35 நாடுகளிலிருந்து ஆயிரத்து 300 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். அனிலாவுக்கு ரூ. 25 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது. இது உயர் கல்விக்கும் கம்ப்யூட்டரில் திறனாளியாகவும் ஆகவும் இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனிலாவின் பெற்றோர் மூர்த்தி மற்றும் பத்மா ஆந்திராவில் உள்ள குண்டூரை சேர்ந்தவர்கள். நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் 3 இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்தனர். இன்னொரு இளம் விஞ்ஞானி ஆனந்த்ரமேஷ்படேலும் இந்திய வம்சாவளியினர் தான்.
கேன்சரால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக நான் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மான்ட்ரியலில் உள்ள தனியார் நிறுவனத்தில் அனிலாவின் தந்தை புற்றுநோய் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
அனிலாவின் முயற்சிகள் கேன்சருக்கான சிகிச்சை முறையில் வெற்றியை தரும். இதில் வேதிமுறைகள் எதுவும் இல்லை.
2002 ம் ஆண்டில் சயன்ஸ் அறிவியல் இதழ் இம்முறையை ஆண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என அறிவித்திருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வந்திருக்கின்றன. எனினும் 1998 ல் தான் இந்த ஆய்வு உயிர்பெற்றது. ஆர். என்.ஏ., ஐ கொஞ்சம் செலுத்தினாலே கேன்சருக்கான ஜீன்கள் மறைந்துவிடும் என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
எலிகளில் நடத்திய சோதனையிலும் நல்ல முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்கள் முன்னணித் துறையில் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கு தேவை வாய்ப்பும், வசதியும் தான் தேவை என்பது அனிலாவின் விஷயத்திலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனிலாவின் உலக சாதனை, அனிலாவின், உள்ள, தான், அறிவியல், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி