வயலின் தந்த புகழ்!
வயலின் வாசிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி பெண் கலைஞராக இருப்பவர் கலைமாமணி டாக்டர் எம். நர்மதா. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வயலின் வாசித்தார் நர்மதா!
இசையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இவருக்கு சென்னை வாணி மகால் சபாவானது சமீபத்தில் "வாணி கலா சுதாகரா" என்ற விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது.
வட இந்திய இசையுடன் தென்னிந்திய இசையை ஒப்பிட்டு ஆராய்ச்சி புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் தன்னந்தனியாக போராடி வெற்றி சிகரத்தை எட்டி இருக்கிறார்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வயலின் தந்த புகழ்!, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி