2002 - ம் ஆண்டின் பரபரப்புப் பெண்மணிகள் !
பெண்கள் அடுப்படியைத் தாண்டாத காலம் போய், அண்டார்டிகாவிலேயே கால் பதிக்கும் காலம் இது ! சொல்லப் போனால் ஆண்களை விட பல துறைகளில் பரபரப்பு, சர்ச்சைகளுக்குள்ளானவர்கள் பெண்கள் தான்...... இவர்கள் கடந்த ஆண்டில் சாதனைகள், சர்ச்சைகளை அதிகம் ஏற்படுத்தியவர்கள் !
சோனியா காந்தி (எதிர்க் கட்சித் தலைவர்) :
ராஜீவ் காந்திக்குப் பிறகு, அவரது அரசியல் வாரிசாக பெரும்பான்மை காங்கிரஸ் கட்சியினரால் அங்கீகரிக்கப் பட்டவர் சோனியா காந்தி. ராஜீவ் காந்தி இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியினரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக கட்சித் தலைமையை ஏற்றார்.
இத்தாலியில் பிறந்து வளர்ந்து, ராஜீவ் காந்தியின் மனைவியான பின்பும், இத்தாலிய குடியுரிமையை விட்டுத் தராத சோனியா, ராஜீவ் காந்தியைக் காதலித்த போதே அவருடன் வெளி நாட்டில் செட்டிலாவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பலரின் விமர்சனத்துக்கு ஆளானவர். திருமணமாகி 25 வருடங்களாகியும் தேசிய மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ள விருப்பமில்லாதவர்.
இன்று அவர் இந்திய தேசத்துக்குப் பாடுபடுவதாகச் சொல்வது பெரிய முரண்பாடாகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
எதிர்க் கட்சித் தலைவரானதிலிருந்து, காந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் தீவிரவாதத்துக்குக் கெதிரான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிப்பதையே தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளார் சோனியா.
பயங்கரவாதத்துக்கெதிராக அரசு ' போடோ ' சட்டத்தை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்த போது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து தன் ' தேச பக்தி ' யை வெளிக் காட்டிய அவர், நாடாளு மன்றத் தாக்குதலுக்குப் பிறகு சற்று தனது சுருதியைக் குறைத்துக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் கண்மூடித் தனமாக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்தை அவர் கைவிடுவார் என்று நம்புவோமாக !
--*--*--
ஜெயலலிதா (அரசியல் தலைவர்)
2001 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பரபரப்பாகப் பேசப் படும் ஒரே பெண் தலைவர் ஜெயலலிதா !
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதிலிருந்து நான்கு தொகுதிகளிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டது வரை பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சமே இல்லை.
பத்திரிகைகளின் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி, தி.மு.க.வை வீழ்த்தி புதிய முதல்வராகப் பொறுப் பேற்ற 45 நாட்களில் அமைச்சரவையை மூன்று முறை மாற்றினார்.
ஜெயலலிதா குறித்த தங்கள் கணிப்புகள் பொய்யானதால் பல பத்திரிகைகள் அவருக்கு எதிராகப் போயின. இதனாலேயே பத்திரியாளர்கள் ஜெயலலிதாவின் எதிரிகள் என்ற தோற்றம் உருவாகி விட்டது.
சென்னையில் கட்டிய மேம் பால ஊழல் வழக்கில் நள்ளிரவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மேயர் ஸ்டாலின் கைது சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டு, அதில் மறைக்கப் பட்ட உண்மைகள் வெளியான பிறகு நீர்த்துப் போயின.
காவல் துறையினரை தாக்கியதாக மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு கைது செய்யப் பட்டதால் எழுந்த பிரச்சினையில் மத்திய அரசுடனேயே மோதிப் பார்த்தவர் ஜெயலலிதா.
டான்சி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைப் பெற்றிருந்த அவர் முதல்வரானது செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பதவி விலகினார் ஜெயலலிதா. அவரது விசுவாசியான ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானார். தற்போது டான்சி வழக்கிலிருந்து அவர் முற்றிலுமாக சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக இந்தியாவில் எந்தத் தலைவரும் பெற்றிராக ஒரு வெற்றி இது.
நாடே பெரிதும் எதிர்பார்த்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராகி இருக்கிறார் ஜெயலலிதா !
தனி ஒரு பெண்ணாக தமிழக அரசியல் களத்தையே தன் பிடிக்குள் வைத்திருப்பது சாதாரண விஷய மல்ல !
--*--*--
ஷபானா ஆஸ்மி (நடிகை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்)
' நல்ல நடிகை ' என்று அனைவராலும் பாராட்டப் பட்டவர் ஷபானா ஆஸ்மி. ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்பவர். ஒரு வேளை விளம்பரம் வேண்டியே இந்த சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொள்கிறாரோ தெரியவில்லை. முன்பு வாட்டர் படத்தின் மூலம் பரபரப்பு ; இப்போது இமாம் புகாரியை கண்டித்ததால் எழுந்த சர்ச்சை.
அமெரிக்கா மீதான சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆதரவாக ' புனிதப் போர் ' அறிவித்த இமாம் புகாரியைக் கண்டித்து அறிக்கை விட்டார் ஷபானா.
' அமெரிக்காவின் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பற்றுதலும் கிடையாது. ஆனால், பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிக்கப் பட வேண்டியதே ! ஓசாமா - பின் லேடன் மற்றும் அவரின் செய்கைகளை ஆதரிக்கும் இமாம் புகாரி போன்ற வர்களும் கண்டனத்துக்குரியவர்களே !' என்பது தான் அந்த அறிக்கையின் சாரம்.
இதனால் காட்டமான இமாம் புகாரி , " விபச்சாரிகளின் கண்டனத்துக் கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை ", என்று ஷபானா ஆஸ்மிக்கு 'ஷாக்' கொடுத்தார்.
ஒரு ராஜ்ய சபா உறுப்பினரான ஷபானா ஆஸ்மியைப் பற்றிய இமாம் புகாரியின் தரக் குறைவான விமர்சனம் நாடாளு மன்றத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இமாம் தனது வார்த்தைகளை திரும்பப் பெற்று ஷபானாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோஷம் வலுத்தது.
" பெண்கள் , கலைஞர்கள் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களைப் பற்றிய மட்டமான அபிப்பிராயத்தை அவரது அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன் " என்று இமாமின் அறிக்கை பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார் ஷபானா.
--*--*--
ஆஷா போஸ்லே (பாடகி)
இந்தியத் திரை இசையில் மங்கேஷ்கர் குடும்பத்தினரின் பங்களிப்பை பாராட்டியே தீர வேண்டும். அக் குடும்பத்திலிருந்து வந்த ஆஷா போஸ்லேவுக்கு 2001 - ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே மற்றும் ' தயாவதி மோதி ' விருதுகள் வழங்கப்பட்டன.
8.9.1933 - ல் தீனாநாத் மங்கேஷ்கர் குடும்பத்தில் பிறந்த ஆஷா தனது கணவரான கண்பத் ராவ் போஸ்லேவின் ஆதரவுடன் தனது குடும்பத் தொழிலான இசைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
11 வயதில் ' படி மா ' திரைப் படத்தில் பின்னணி பாடகியாக தனது கலை வாழ்க்கையைத் துவங்கிய ஆஷா இது வரையில் 20 மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
தனக் கென்று, ஒரு பாணியை பின் பற்றாமல், பாட்டுக்கு ஏற்ப தனது குரலை மாற்றிக் கொள்வது ஆஷாவின் தனிச் சிறப்பு.
ஓ.பி. நையார், ஆர்.டி. பர்மன், கய்யாம் மற்றும் லஷ்மி காந்த் பியாரிலால் போன்ற இசையமைப்பாளர்கள் ஆஷா போஸ்லேவின் அற்புதமான குரலை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
70 மற்றும் 80 களில் தனது மூத்த மகனது இசையமைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார் ஆஷா. அவரது மணியோசை போன்ற குரலை ஷம்மி கபூரும் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தியத் திரை இசைக்கு முகமது ரபி, கிஷோர் குமார், மன்னாடே, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் செய்த பங்களிப்பை எங்ஙனம் நம்மால் மறுக்க முடியாதோ அப்படித் தான் ஆஷா போஸ்லேவின் பங்களிப்பும் !
--*--*--
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2002 - ம் ஆண்டின் பரபரப்புப் பெண்மணிகள் !, தனது, அவர், தான், அவரது, மீரா, இமாம், ஷபானா, மேதா, ஜெயலலிதா, நர்மதா, பட்ட, வழக்கில், சோகீலா, வில்கூ, கமல், நீதி, வரும், வேண்டும், மூலம், பிறகு, தலைவர், அய்யர், ராஜீவ், தன்னை, திரைப், திரைப்பட, சோனியா, அருந்ததி, அரசியல், பட்கர், வருகிறார், நீதிமன்ற, காந்தி, தன்னுடைய, கட்சித், காலம், சமூக, படத்தில், உச்ச, கொண்டுள்ளார், பெண்கள், மத்திய, நாடாளு, முறை, மன்றத்தில், இன்று, அறிக்கை, போஸ்லேவின், தெரிவித்து, மங்கேஷ்கர், இந்தியத், பின், பற்றிய, குரலை, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி